உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
காப்பு
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா உண்மைவிளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர் அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப் பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம் | 1 |
நூல்
பொருள்
பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்தவினா ஐயாநீ தான் கேட்டு அருள். | 2 |
ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றே தான் மாறா வினை ஏது? மற்று இவற்றின் - வேறு ஆகா நான் ஏது? நீ ஏது? நடம் அஞ்செழுத்துத் தான் ஏது? தேசிகனே! சாற்று | 3 |
உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உந்தனக்கு வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து - தெள்ளியசீர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த யோகம் நிகழ் புதல்வா! உற்று | 4 |
ஆன்ம தத்துவம்
நாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் - ஆக்கும் அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா உறுகாயம் ஆம் இவற்றால் உற்று | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், உண்மை, நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், தான், தத்துவம், உற்று, இலக்கியங்கள், மெய்கண்ட, பொருள்