சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின் இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே. |
171 |
மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும் தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப் போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக் காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே. |
172 |
பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல் உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஔ¤க்கு மாகும் கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால் மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே. |
173 |
போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண் ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே. |
174 |
புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும் குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய் மருள்தன்றன் குணம தாகி மலம்அசித் தாகி நிற்கும் தெருள்தன்றன் குணம தாகிச் சித்தென நிற்கும் சீவன். |
175 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, நிற்கும், ஞானக், சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், அவித்தை, குணம, தாகி, காயம், சோதி, மாயை, இலக்கியங்கள், கிரியைகள்