சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூல்
விநாயகர் வணக்கம்
திருந்திய அருந்தவம் பொருந்துபன் முனிவர் கமையாக் காத லமையாது பழிச்சு நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத் தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை வாட்டரு மும்மை நாட்ட நால்வாய்ப் பாச மங்குசந் தேசுறு மெயிறொண் கனியிவை தாங்கும் புனித நாற்கரத் தங்கதங் கடகம் பொங்கிழை யார நிறைமணிச் சுடிகைக் கறையணற் கட்செவி கொண்ட திண்பெரும் பண்டிக் குறுந்தாட் களிறுத னிருகழல் கருதா வெளிறுறு துயரம் வீட்டினம் பெரிதே. |
பாயிரம்
பெருங்கட லுதவுங் கருங்கடு வாங்கிக் கந்தரத் தமைத்த வந்தமில் கடவுள் பாலரை யுணர்த்து மேலவர் போலக் கேட்போ ரளவைக் கோட்படு பொருளா லருளிய கலைக ளலகில வாலவை பலபல சமயப் பான்மைத் தன்றே ய·தா லந்நூற் றன்மை யுன்னிய மாந்தர் இதுவே பொருளென் றதனிலை யறைதலின் வேற்றோர் பனுவ லேற்றோர்க் கிசையா மாறு பாடு கூறுவ ரதனாற் புறச்சமய யங்கள் சிறப்பில வாகி யருளின் மாந்தரை வெருளுற மயக்கி யலகைத் தேரி னிலையிற் றீரும் ஈங்கிவை நிற்க நீங்காச் சமய மூவிரு தகுதி மேவிய தாமும் ஒன்றோ டொன்று சென்றுறு நிலையி லாறும் மாறா வீறுடைத் திவற்று ளெவ்வ மில்லாச் சைவநற் சமயத் தலகி லாகம நிலவுத லுளவை கனக மிரணியங் காஞ்சன மீழந் தனநிதி யாடகந் தமனிய மென்றிப் பலபெயர் பயப்பதோர் பொருளே போலப் பதிபசு பாச விதிமுறை கிளக்கும் வாய்ந்த நூல்க ளாய்ந்தன ராகி யாசா நாகி வீசிய சமத்துடன் ஏழஞ் சிருநூ றெடுத்த வாயிரம் வாழுநற் சகன மருவா நிற்பப் பொற்பொது மலிந்த வற்புத னானி யாறாம் விழவிற் பொற்றே ராலயத் தேறா வெண்மர் நிரையி லிருப்ப மயங்கு வாத மாயா வாதி முயங்கிட வொருதலை முதுவெதிர் மணிசேர் பெண்ணை சூழ்ந்த வெண்ணையம் பதிதிகழ் மெய்கண் டவனருள் கைகண் டவர்களி லொருவ ரொருதலை மருவி யிருப்ப வஞ்சப் பிறவிக் கஞ்சிவந் தொருவ னேதிறை யருளென வீதெனு மாயா வாதியை யயலினர் மறுதலைத் தருடர மற்றவ ரயலின ரவருரை மறுத்துச் சொற்றர வயலின ரவருந் தொலைவுற் றின்னே யெவரு முன்னே கழியுழி யாங்கய லிருந்த வருளின ரழகிது நீங்கள்சங் கற்ப நிராகரித் தமையென மற்றவ ருரைத்த சொற்றரு பொருள்கொடு வாத செற்ப விதண்டையு மேதுவு மோது நால்வகை யுவமையுந் திகழ்தர வருள்சேர் மாந்தர் வெருள்சே ராமற் றற்கமுங் விடயமுங் கற்க நற்கவி மாந்தர் நகநவிற் றுவனே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சங்கற்ப, சித்தாந்த, நிராகரணம், நூல்கள், சாத்திரங்கள், மாந்தர், மாயா, மற்றவ, இலக்கியங்கள், எழுதப்பட்டது, சமயத்