ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.079.திருப்புள்ளிருக்குவேளூர்
5.079.திருப்புள்ளிருக்குவேளூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - வைத்தியநாதர்.
தேவியார் - தையல்நாயகியம்மை.
1856 | வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப் புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர் நள்ளி ருப்பர் நரகக் குழியிலே. |
5.079.1 |
வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.
1857 | மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க் கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே போற்ற வல்லீரேற் புள்ளிருக்கு வேளூர் சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே. |
5.079.2 |
விடைசொல்லும் தௌவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு.முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.
1858 | அரும றையனை ஆணொடு பெண்ணனைக் கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர் உருகி நைபவ ருள்ளங் குளிருமே. |
5.079.3 |
அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும்.
1859 | தன்னு ருவை யொருவர்க் கறிவொணா மின்னு ருவனை மேனிவெண் நீற்றனைப் பொன்னு ருவனைப் புள்ளிருக்கு வேளூர் என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே. |
5.079.4 |
தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.
1860 | செங்கண் மால்பிர மற்கும் அறிவொணா அங்கி யின்னுரு வாகி யழல்வதோர் பொங்க ரவனைப் புள்ளிருக்கு வேளூர் மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே. |
5.079.5 |
சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.
1861 | குற்ற மில்லியைக் கோலச் சிலையினால் செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப் புற்ற ரவனைப் புள்ளிருக்கு வேளூர் பற்ற வல்லவர் பாவம் பறையுமே. |
5.079.6 |
குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.
1862 | கையி னோடுகால் கட்டி யுமரெலாம் ஐயன் வீடின னென்பதன் முன்னம்நீர் பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர் மையு லாவிய கண்டனை வாழ்த்துமே. |
5.079.7 |
கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.
1863 | உள்ள முள்கி யுகந்து சிவனென்று மௌள வுள்க வினைகெடு மெய்ம்மையே புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. |
5.079.8 |
உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று "சிவன்" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக.
1864 | அரக்க னார்தலை பத்து மழிதர நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர் விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே. |
5.079.10 |
இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.079.திருப்புள்ளிருக்குவேளூர் , புள்ளிருக்கு, வேளூர், திருமுறை, திருப்புள்ளிருக்குவேளூர், பாதம், கெடும், வாழ்த்த, ரவனைப், உறையும், இறைவன், வணங்கித், வள்ளல், ஐயன், நிறுவிய, கட்டி, உருகி, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், ஐந்தாம், புள்ளி, பொன்னார், ஆகிய, ஆணொடு, வல்லமை, புள்ளிருக்குவேளூரைப், புள்ளிருக்குவேளூரில்