நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.009.திருஅங்கமாலை

4.009.திருஅங்கமாலை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
82 | தலையே நீவணங்காய் - தலை தலையா லேபலி தேருந் தலைவனைத் |
4.009.1 |
தலைகளால்ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
83 | கண்காள் காண்மின்களோ - கடல் எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக் |
4.009.2 |
கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.
84 | செவிகாள் கேண்மின்களோ -சிவன் எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும் |
4.009.3 |
செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்.
85 | மூக்கே நீமுரலாய் - முது வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை |
4.009.4 |
மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல்வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்போழுதும் போற்றி ஒலிப்பாயாக.
86 | வாயே வாழ்த்துகண்டாய் - மத பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை |
4.009.5 |
வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக.
87 | நெஞ்சே நீநினையாய் - நிமிர் மஞ்சா டும்மலை மங்கை மணாளனை |
4.009.6 |
நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக.
88 | கைகாள் கூப்பித்தொழீர் - கடி பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் |
4.009.7 |
கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.
89 | ஆக்கை யாற்பயனென் - அரன் பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ் |
4.009.8 |
எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?
90 | கால்க ளாற்பயனென் - கறைக் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் |
4.009.9 |
நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்?
91 | உற்றா ராருளரோ - வுயிர் குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் |
4.009.10 |
கூற்றுவன்நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும்பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
92 | இறுமாந் திருப்பன்கொலோ -ஈசன் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு |
4.009.11 |
எல்லோரையும் அடக்கி ஆளும் எம்பெருமானுடைய பலவாகிய சிவகணத்தவருள் ஒருவனாகிச் சிறிய மானை ஏந்திய அப்பெருமானுடைய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று அங்கு இன்பச் செருக்கோடு இருப்பேனோ?
93 | தேடிக் கண்டுகொண்டேன் - திரு தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே |
4.009.12 |
திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி அவன் என் நெஞ்சத்துள்ளேயே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.009.திருஅங்கமாலை , உடைய, திருமுறை, திருஅங்கமாலை, நீநினையாய், கேள்வனை, நெஞ்சே, வாழ்த்துகண்டாய், கூப்பித்தொழீர், வாயே, யாது, ராருளரோ, திருப்பன்கொலோ, கண்டுகொண்டேன், தங்கியிருக்கும், ளாற்பயனென், பார்வதி, பயன், யாற்பயனென், நோக்கிய, தலையே, நீவணங்காய், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், எடுக்கும், காண்மின்களோ, மூக்கே, நீமுரலாய், எப்பொழுதும், பெருமானுடைய, பெருமானை, கேண்மின்களோ, சுடுகாட்டில்