நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.006.திருக்கழிப்பாலை

4.006.திருக்கழிப்பாலை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
52 | வனபவள வாய்திறந்து வானவர்க்குந் சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு அனபவள மேகலையொ டப்பாலைக் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் |
4.006.1 |
அழகியபவளம் போன்ற வாயைத் திறந்து தேவர்களுக்கும் அருள் வழங்குகின்றவனே என்கின்றாள். சிவந்தபவளம் போன்ற திண்ணிய தோள்களின்மேல் சேர்ந்து விளங்கும் வெள்ளிய திருநீறு அணிந்தவனே என்கின்றாள். அன்னம் போன்ற நடையினளாய்ப் பவளத்தாலாகிய மேகலையை அணிந்த பார்வதியோடு சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு அப்பாற்பட்ட துரியாதீதத்தில் உள்ளவன் என்கின்றாள். பெரிய பவளங்களைக் கடல் கரையில் சேர்க்கும் திருக்கழிப்பாலையில் உள்ள எம்பெருமானை என்மகள் தரிசித்தாளோ?
53 | வண்டுலவு கொன்றை வளர்புன் விண்டலர்ந்து நாறுவதொர் வெள்ளெருக்க உண்டயலே தோன்றுவதொ ருத்தரியப் கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் |
4.006.2 |
வண்டுகள் உலவும் கொன்றைப் பூக்கள் தங்கிய செந்நிறச் சடையனே! இதழ் விரிந்து நறுமணம் கமழும் புதிய வெள்ளெருக்க மலரும் அச்சடையில் உள்ளது. பக்கத்தில் காட்சி வழங்கும் மேலாடையாகப் பட்டினை அவன் அணிந்திருத்தலும் உண்டு என்று கூறுகின்ற என் பெண் கழிமுள்ளி கடற்கரையருகே வளருகின்ற கழிப்பாலைப் பெருமானைக் கண்டாளோ?
54 | பிறந்திளைய திங்களெம் பெம்மான் நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் கறங்கோத மல்குங் கழிப்பாலைச் |
4.006.3 |
இளையபிறைச்சந்திரன் எம்பெருமான் முடிமேல் உள்ளது. அவன் திருமேனியின் நிறம் ஒளிவீசும் குங்குமத்தின் நிறமே. வீரத்தை வெளிப்படுத்தும் வேல் போன்ற கண்களையுடைய பார்வதிதேவியின் கண்மணிபோன்ற நீலகண்டன் என்று கூறுகின்ற என் பெண் ஒலிக்கின்ற கடல் வெள்ளம் மிகுகின்ற கழிப்பாலையை உகந்தருளியிருக்கும் பெருமானைத் தரிசித்தாளோ?
55 | இரும்பார்ந்த சூலத்த னேந்தியொர் சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ணவெண் பெரும்பால னாகியொர் பிஞ்ஞக கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் |
4.006.4 |
இரும்பினாலாய சூலமும் மழுப்படையும் ஏந்தியவன், வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடித் திருநீற்றை அணிந்தவன். பெரிய இடப்பகுதியைப் பார்வதி பாகமாகக் கொண்டு அப்பகுதியில் விளங்கும் தலைக்கோலத்தை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ?
56 | பழியிலான் புகழுடையன் பானீற்ற விழியுலாம் பெருந்தடங்கண் ணிரண்டல்ல சுழியுலாம் வருகங்கை தோய்ந்த கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் |
4.006.5 |
எம்பெருமான் பழியில்லாதவன், புகழுடையவன், பால்போன்ற நீறு அணிந்தவன், காளை வாகனத்தை உடையவன், அவனுக்கு விழிகளாக அமைந்தவை இரண்டல்ல, மூன்று. அவன் நீர்ச் சுழிகளோடு பரவும் கங்கை வந்து தங்கிய சடைமுடியை உடையவன் என்று கூறுகின்ற என்பெண், எங்கும் பரவி ஓடுகின்ற உப்பங்கழிகளால் சூழப்பட்ட திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ?
57 | பண்ணார்ந்த வீணை பயின்ற எண்ணார் புரமெரித்த வெந்தை பண்ணார் முழவதிரப் பாடலொ கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் |
4.006.6 |
பண்கள் நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாகிய வீணையை ஒலியெழுப்பும் விரல்களை உடையவனே! பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய எம் தந்தையாகிய பெருமானே! பண்களுக்கு ஏற்ப முழவு என்ற தோற்கருவி ஒலிக்கப் பாடிக் கொண்டு கூத்து நிகழ்த்துபவனே! என்று கூறுகின்ற என் பெண் கண்ணுக்கு நிறைவைத் தரும் பூக்கள் நிறைந் சோலைகளையுடைய திருக்கழிப்பாலை இறைவனைத் தரிசித்தாளோ?
58 | முதிருஞ் சடைமுடிமேன் மூழ்கு அதுகண் டதனருகே தோன்று சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் |
4.006.7 |
நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது. அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சிவழங்குகின்றது. வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ?
59 | ஓரோத மோதி யுலகம் நீரோத மேற நிமிர்புன் பாரோத மேனிப் பவள காரோத மல்குங் கழிப்பாலைச் |
4.006.8 |
ஓர்ந்து கொள்ளத்தக்க வேதங்களைஓதிக்கொண்டு உலகம் முழுதும் பிச்சை ஏற்றுத் திரிகின்றவனே! கங்கை நீர்வெள்ளம் உயர அதற்கேற்ப உயர்ந்து தோன்றும் செந்நிறச் சடையவனே உலகைச் சூழ்ந்த கடலில் உள்ள செந்நிறப் பவளம் எம்பெருமானுடைய திருமேனியின் நிறமே என்று கூறுகின்ற என்பெண், கரிய கடல்வெள்ளம் மிகும் திருக்கழிப்பாலையின்பெருமானைத் தரிசித்தாளோ?
60 | வானுலாந் திங்கள் வளர்புன் ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் தேனுலாங் கொன்றை திளைக்குந் கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் |
4.006.9 |
வானத்தில் உலவ வேண்டிய பிறைதங்கிய செஞ்சடையனே! புலால் நாற்றம் கமழும் வெண்ணிற மண்டையோட்டைக் கையில் கொண்டு ஊர்ஊராகப் பிச்சைக்குத் திரிகின்றவனே! தேன் என்ற வண்டினங்கள் சுற்றும் கொன்றைப் பூக்கள் சிறந்துவிளங்கும் திருமார்பினனே! என்று எம்பெருமானைப் பற்றிக்கூறும் என்மகள், எங்கும் பரவுகின்ற நறுமணம் சூழ்ந்த திருக்கழிப்பாலையிலுள்ள பெருமானைத் தரிசித்தாளோ?
61 | அடர்ப்பரிய விராவணனை யருவரைக்கீ சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் மடற்பெரிய வாலின்கீ ழறநால்வர்க கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் |
4.006.10 |
துன்புறுத்தி வெல்லுவதற்கரிய இராவணனைக் கயிலைமலையின்கீழ் வருத்தியவனே! ஒளிவீசும் பெருமையை உடைய திருமேனியில் நீறு பூசியவனே! பெரிய இலைகளை உடைய கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு ஒரு காலத்தில்அறத்தை உபதேசித்தவனே என்று கூறுகின்ற என்பெண் கடலின் தொகுதிகளாகிய உப்பங்கழிகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.006.திருக்கழிப்பாலை , யென்கின், னென்கின், கொல்லோ, தரிசித்தாளோ, கூறுகின்ற, கண்டாள், கழிப்பாலைச்சேர்வானைக், பெருமானைத், சூழ்ந்த, என்பெண், கொண்டு, திருக்கழிப்பாலை, பூக்கள், அவன், பெண், கொன்றை, திருமுறை, உடையவன், என்கின்றாள், பெரிய, கடல், எம்பெருமான், ஒளிவீசும், திருமேனியின், உடைய, நிறமே, திருக்கழிப்பாலைப், கங்கை, நீறு, மல்குங், எங்கும், அணிந்தவன், மென்கின், சுண்ணவெண்ணீற்றவனே, திரிகின்றவனே, செந்நிறச், விளங்கும், உள்ள, என்மகள், சிந்துங், திருச்சிற்றம்பலம், நான்காம், தேவாரப், பதிகங்கள், வளர்புன்சடையானே, கழிப்பாலைச்சேர்வானைக்கண்டாள், கமழும், உள்ளது, கழிப்பாலைப், நறுமணம், தங்கிய, வண்டுகள், கொன்றைப், குங்குமத்தின்