நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.053.திருவாரூர்

4.053.திருவாரூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
508 | குழல்வலங் கொண்ட சொல்லாள் கழல்வலங் கொண்டுநீங்காக் அழல்வலங் கொண்ட கையா தொழல்வலங் கொண்டல் செய்வான் |
4.053.1 |
வேய்ங்குழல் ஓசையை வென்ற இனியசொல்லையுடையவளாய் அழகிய வேல்போன்ற கண்களையுடைய பார்வதியின் திருவடிகளை வலம் வந்து நீங்காத அடியவர்களுடைய கண்கள் நிறைவுறும்படியாகத் தீயினை வலக்கையில் கொண்ட பெருமான் அருளாகிய ஒளியைவீசும் திருவாரூரைத் தொழுவதற்கும் வலம் வருவதற்கும் வாய்ப்புடையவராகப் பிறப்பெடுத்தவரே பயனுடைய பிறப்பினைப் பெற்றவராவார்.
509 | நாகத்தை நங்கை யஞ்ச வேகத்தைத் தவிர நாகம் பாகத்தி னிமிர்தல் செய்யாத் ஆகத்திற் கிடந்த நாக |
4.053.2 |
ஆரூரனிடத்தில் பாம்பைப் பார்த்துப் பார்வதி அஞ்ச, அப்பார்வதியை மயில் என்று கருதிப் பாம்பு தான் சீறிச் செயற்படும் உற்சாகத்தை நீக்கிச் சோர்வடைய, அப்பாம்பு தன்னை விழுங்கும் என்று அஞ்சிப்பிறை யானைத்தோலுள் மறைய ஒரு பகுதியும் நிமிர்ந்து பார்த்தலைச் செய்யாத சந்திரனை மின்னல் என்று கருதி அஞ்சி மார்பில் கிடந்த நாகம் சோர்ந்து கிடக்கிறது.
510 | தொழுதகங் குழைய மேவித் அழுதகம் புகுந்து நின்றா எழிலக நடுவெண் முத்த பொழிலகம் விளங்கு திங்கட் |
4.053.3 |
தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக, ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால், தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார்.
511 | நஞ்சிருண் மணிகொள் கண்டர் வெஞ்சுடர் விளக்கத் தாடி வெஞ்சுடர் முகடுதீண்டி அஞ்சுட ரணிவெண்டிங்க |
4.053.4 |
அழியாத சூரியமண்டலத்தின் உச்சியைத் தொட்டுக் கொண்டுள்ள சடைமுடியில் வெள்ளிக் கம்பி இருந்தாற்போன்ற அழகிய ஒளி வீசும் பிறையை அணிந்த ஆரூர்ப் பெருமான் நஞ்சினால் இருண்ட நீலகண்டராய், இருள்மிக்க சுடுகாட்டில் இரவிலே வெளிப்படுகின்ற சுடுகாட்டுத் தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே கூத்தாடி விளங்குபவராவார்.
512 | எந்தளிர் நீர்மை கோல பைந்தளிர்க் கொம்ப ரன்ன தஞ்சடைத் தொத்தி னாலுந் அந்தளி ராகம் போலும் |
4.053.5 |
எம்முடைய கற்பக மரத் தளிரின் தன்மையான அழகிய மேனியை உடைய ஆரூரன் என்று தேவர்கள் போற்றுமாறு, பசிய தளிரை உடைய காமவல்லி போன்று, தம் மேனிமீது படரும் கொடிபோன்ற பார்வதியால் தழுவப்பட்டு, தம்முடைய சடைத் தொகுதியினாலும் தம்முடைய தனிப்பண்பினாலும் அழகிய தளிரினது வடிவம் போன்றவர் ஆவார் ஆரூரனார்.
513 | வானகம் விளங்க மல்கும் தானக மழிய வந்து ஊனகங் கழிந்த ஓட்டி ஆனகத் தஞ்சு மாடு |
4.053.6 |
புலாலின் சுவடு நீங்கப்பெற்ற மண்டையோட்டில் பிச்சை எடுத்து, ஒளி பொருந்திய விடத்தை உண்டு, பஞ்சகவ்வியத்தில் நீராடும் ஆரூர்ப்பெருமான் வான்வெளி எங்கும் ஒளிபடருமாறு வளரும் பிறையைச் சூடி, பிச்சை இட வரும் இளைய மகளிருடைய மனம் பெண்மைக்குரிய பண்புகள் அழியுமாறு வந்து பிச்சை எடுத்துத் திரிவார் போலும்.
514 | அஞ்சணை கணையி னானை அஞ்சணை குழலி னாளை அஞ்சணை யஞ்சு மாடி அஞ்சணை வேலி யாரூ |
4.053.7 |
ஐந்து வேலிப் பரப்புடைய திருவாரூர்க்கோயிலை விரும்பி உறையும் பெருமான் ஐங்கணைகளை உடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு ஒருகாலத்தில் நெற்றிக் கண்ணால் நோக்கி, ஐந்து விதமாக முடிக்கப்படும் (ஐம்பால்) கூந்தலையுடைய பார்வதியை அமுதமாகக் கருதி அவளோடு பொருந்தி, சிரித்து, பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் கொண்டு, ஐந்து தலைகளை உடையதாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பினை ஆட்டுபவராக உள்ளார்.
515 | வணங்கிமுன் னமர ரேத்த பிணங்குடைச் சடையில் வைத்த மணங்கம ழோதி பாகர் அணங்கொடி மாட வீதி |
4.053.8 |
சந்திர மண்டலம் வரையில் உயர்ந்து அந்த வட்டமான பகுதியில் அடைந்து சந்திரனை அணுகுகின்ற அழகிய கொடிகள் உயர்த்தப்பட்ட மாடங்களை உடைய வீதிகளைக் கொண்ட ஆரூரில் உள்ள எம்பெருமான் தேவர்கள் தம்முடைய வலிய வினைப் பயன்கள் தீருமாறு முன் நின்று வணங்கித் துதிக்க ஒன்றோடொன்று கலந்து பின்னி முறுகிய சடைகளிடையே பிறையைச் சூடிய பெருமையை உடைய தலைவராவார்.
516 | நகலிடம் பிறர்கட் காக புகலிட மாகி வாழும் இகலிட மாக நீண்டங் அகலிடம் பரவி யேத்த |
4.053.9 |
வீண் பேச்சிற் பொழுதுபோக்கி நல்லோர் இகழ்ச்சிக்கிடமாகும் நிலை (அடியாரல்லாத) பிறர்க்காக நான்கு வேதங்களையும் ஓதும் பக்தர்களுக்கு அடைக்கலமாகி வாழ்பவராய், தமக்கு அடைக்கலம் தருபவர் பிறர் யாரும் இல்லாதவகையில் அனைவருக்கும் தாமே அடைக்கலமாகும் பெருமானாய், திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து தமக்குள் மாறுபட்டு அடியும் முடியும் தேடும் தீப்பிழம்பாக நீண்டு, உலகத்தார் முன் நின்று துதித்துப் புகழுமாறு ஆரூர்த் தலைவர் விளங்குகிறார்.
517 | ஆயிர நதிகண் மொய்த்த ஆயிர மசுரர் வாழு ஆயிரந் தோளு மட்டித் ஆயிர மடியும் வைத்த |
4.053.10 |
நதிகள் பலவாக வந்து கலக்கும் அலைகளையுடைய கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி, அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் கொண்டுள்ளவர் ஆரூரனாகிய பெருமான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.053.திருவாரூர் , உடைய, னாரே, அழகிய, பெருமான், கொண்ட, ஐந்து, வந்து, பிச்சை, திருவாரூர், தம்முடைய, திருமுறை, தேவர்கள், நீர்மை, சூடிய, பிறையைச், நின்று, முன், தீருமாறு, விரும்பி, எடுத்து, புகுந்து, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நான்காம், வலம், கிடந்த, சூடி, போலு, கருதி, சந்திரனை, மனம்