நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.040.திருவையாறு

4.040.திருவையாறு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
394 | தானலா துலக மில்லை கானலா தாட லில்லை வானலா தருளு மில்லை ஆனலா தூர்வ தில்லை |
4.040.1 |
நம் தலைவராகிய ஐயாறனார் தொடர்பின்றி உலகங்களின் நிலைபேறு இல்லை. உலகங்களிலுள்ள ஆன்மாக்களைத் தவிர வேறு அடிமைகள் அவர்க்கு இல்லை. சுடுகாட்டினைத் தவிர வேறு கூத்தாடும் இடம் இல்லை. தம்மை உண்மையால் தியானிப்பவர்க்கு வீடுபேற்றைத் தவிர வேறு சிறு சிறப்புக்களை அவர் அருளுவதில்லை. நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடும் இவர்ந்து செல்வதற்குக் காளையைத் தவிர வேறு வாகனமும் அவர்க்கு இல்லை.
395 | ஆலலா லிருக்கை யில்லை நூலலா னொடிவ தில்லை மாலுநான் முகனுங் கூடி ஆலலா லமுத மில்லை |
4.040.2 |
ஐயன் ஐயாறனார்க்குக் கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் உபதேச பீடமாக அமைவதில்லை. பெருந்தவத்தையுடைய முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை. திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர அவருக்கு உணவு வேறு இல்லை.
396 | நரிபுரி சுடலை தன்னி சுரிபுரி குழலி யோடுந் தெரிபுரி சிந்தை யார்க்குத் அரிபுரி மலர்கொ டேத்து |
4.040.3 |
திருமால் விரும்பிய மலர்களைக் கொண்டு வழிபடும் ஐயன் ஐயாறனார் நரிகள் விரும்பி உலவும் சுடுகாட்டில் நடமாடல் தவிர மற்றொன்றுஞ் செய்வதில்லை. சுருண்ட முறுக்குண்ட கூந்தலை உடைய பார்வதியைத் தவிர வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரையும் கொண்டு வாழ்தல் இல்லை. தன்னுண்மையை ஆராய்ந்து சிந்தித்தலையுடைய அடியார்களுக்கு உள்ளத் தௌவினை வழங்குவதைத் தவிர எம்பெருமான் அருளக் கூடியதும் வேறொன்றும் இல்லை.
397 | தொண்டலாற் றுணையு மில்லை கண்டலா தருளு மில்லை பண்டைநான் மறைகள் காணாப் அண்டவா னவர்க ளேத்து |
4.040.4 |
பழைய நான்மறைகளாலும் உள்ளவாறு உணர இயலாதவர் என்று தியானித்துத் தேவர்களும் துதிக்கும் ஐயன் ஐயாறனார்க்குத் தொண்டர்களைத் தவிரத் துணையாவார் பிறர் இல்லை. தோல்களைத் தவிர வேறு ஆடைகள் இல்லை. அடியார்களின் அநுபூதியிற் கண்டாலல்லாமல் அவர் அவர்களுக்கு அருளுவதில்லை. அடியார்களோடு கூடிய பின்னர் அவர்களை அப்பெருமான் பிரிவதில்லை.
398 | எரியலா லுருவ மில்லை கரியலாற் போர்வை யில்லை பிரிவிலா வமரர் கூடிப் அரியலாற் றேவி யில்லை |
4.040.5 |
ஐயன் ஐயாறனார்க்கு நெருப்புருவம் தவிர வேற்றுருவமில்லை. காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஏறுவதில்லை. யானைத்தோலைத் தவிர வேற போர்வை இல்லை. காணுவதற்கு ஏற்ற ஞானப் பிரகாசம் உடைய அப்பெருமானுக்கு, பிரியாது தேவர்கள் கூடி 'மேம்பட்ட சிறப்பினை உடைய பெருமான்' என்று துதிக்கும் திருமாலைத் தவிர வேறு தேவி இல்லை.
399 | என்பலாற் கலனு மில்லை புன்புலா னாறு காட்டிற் துன்பிலாத் தொண்டர் கூடித் அன்பலாற் பொருளு மில்லை |
4.040.6 |
ஐயன் ஐயாறனார்க்கு எலும்புகளைத் தவிர வேறு அணிகலன்கள் இல்லை. காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஊர்வதில்லை. கீழான புலால் நாற்றம் வீசும் சுடுகாட்டுச் சாம்பலைத் தவிர வேற்றுப் பொருள்களைப் பூசுவதில்லை. உலகத் துன்பங்களில் அழுந்துதல் இல்லாத அடியவர்கள் ஒன்று கூடித் தொழுது, மனம் உருகிக் கண்ணீர் வடித்து ஆடிப்பாடும் அன்பினைத் தவிர அவர் வேறு எதனையும் குறிப்பிடத்தக்க பொருளாய்க் கருதுவதில்லை.
400 | கீளலா லுடையு மில்லை தோளலாற் றுணையு மில்லை வேளலாற் காயப் பட்ட ஆளலாற் கைம்மா றில்லை |
4.040.7 |
அரை நாண் பட்டிகையோடு கூடிய கோவணமாகிய கீள் உடையைத் தவிர ஐயன் ஐயாறனார்க்கு வேறு உடையும் இல்லை. ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்புகளை அழகிய அணிகலன்களாக அணியும் தம் தோள்களைத் தவிர வேறு துணையும் இல்லை. பூங்கொத்துக்கள் மலரும் இளவேனிற்காலத்திற்கு அரசனாகிய மன்மதனைத் தவிர அவரால் நெற்றிக்கண் பொறியால்எரிக்கப்பட்ட வீரன் வேறு ஒருவனும் இல்லை. அப்பெருமானுக்கு அவரை விடுத்து என்றும் நீங்குதல் இல்லாத அடிமைத் தொழில் செய்வதனைத் தவிரக் கைம்மாறாக அடியார்கள் செய்யத்தக்கது பிறிதொன்றுமில்லை.
401 | சகமலா தடிமை யில்லை நகமெலாந் தேயக் கையா முகமெலாங் கண்ணீர் மல்க அகமலாற் கோயி லில்லை |
4.040.8 |
ஐயன் ஐயாறனார்க்கு உலக உயிர்களைத் தவிர அடிமையாவார் வேறு இல்லை. தமக்குத் தாமே ஒப்பாவார் அன்றி ஒப்பாவார் வேறு இல்லை. நகங்களெல்லாம் தேயுமாறு கைகளால் புதுமலர்களைக் கொய்து வணங்கி அவற்றை அவருக்கு அர்ப்பணித்து முகமெல்லாம் கண்ணீர் வழிந்துபரவ, அவர் திருமுன்னர் வணங்கித் துதிக்கும் தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர அவருக்கு வேறு இருப்பிடம் இல்லை.
402 | உமையலா துருவ மில்லை நமையெலா முடைய ராவர் கமையெலா முடைய ராகிக் கமைவிலா வருள்கொ டுப்பா |
4.040.9 |
ஐயன் ஐயாறனார்க்குப் பார்வதியொடு இணைந்த உருவமன்றி வேற்று உருவம் இல்லை. இவ்வுலகங்களைத் தவிர அவருக்கு வேறு உடைமைப் பொருள் இல்லை. அவர் அடியவராகிய நம்மை எல்லாம் தம் அடிமைகளாக உடையவர்.உயிர்களுக்கு அவரால் நன்மையே அன்றித் தீமை சற்றும் இல்லை. பகைவரையும் பொறுக்கும் பொறுமை உடையவராகித்தம் திருவடிகளை முன்நின்று துதிக்கும் அடியவர்களுக்குக் குறைவில்லாத அருள்களை அவர் நல்குபவராவார்.
403 | மலையலா லிருக்கை யில்லை தலையலா னெரித்த தில்லை நிலையிலார் புரங்கள் வேவ அலையினார் பொன்னி மன்னு |
4.040.10 |
அலைகளை உடைய காவிரி நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமானுக்குக் கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான இருப்பிடம் இல்லை. தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத் தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர். நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர் வேற்றுச் செயல் எதுவும் செய்யவில்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.040.திருவையாறு , தவிர, இல்லை, வேறு, அவர், னார்க்கே, ஐயன், உடைய, துதிக்கும், ஐயாறனார்க்கு, அவருக்கு, வேற்று, லிருக்கை, கண்ணீர், திருவையாறு, றுணையு, காளையைத், திருமுறை, கூடிய, போர்வை, வீசும், இருப்பிடம், முடைய, தீமை, ஒப்பாவார், அவரால், அப்பெருமானுக்கு, இல்லாத, தொழுது, வாகனங்களில், மில்லையையனை, தடிமை, தருளு, ஐயாறனார், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், அவர்க்கு, தம்மை, கூடித், திருவடிகளை, வேற்றுப், வணங்க, அருளுவதில்லை, கூந்தலை, கொண்டு