நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.004.திருவாரூர்

4.004.திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
32 | பாடிளம் பூதத்தி னானும் கூடிள மென்முலை யாளைக் ஓடிள வெண்பிறை யானும் ஆடிளம் பாம்பசைத் தானு |
4.004.1 |
ஆரூரில் உகந்தருளியிருக்கும் பெருமான், பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும், சிவந்தவாயினை உடையவனும், பவளம் போன்ற உடல் நிறத்தினாலும், தன் உடம்பின் பாதியாக இணைந்த பார்வதியைக் கூடியதால் ஏற்பட்ட விசேட அழகினனும், வானில் உலவக்கூடிய வெண்பிறையைச் சூடியவனும், ஒளிவிளங்கும், சூலப்படையை உடையவனும் ஆடுகின்ற இளைய பாம்பினைக் கட்டிக் கொண்டவனும் ஆவான்.
33 | நரியைக் குதிரைசெய் வானும் விரதங்கொண் டாடவல் லானும் முரசதிர்ந் தானைமுன் னோட அரவரைச் சாத்திநின் றானு |
4.004.2 |
நரியைக் குதிரையாக மாற்றும் அகடித கடநா சாமர்த்தியம் உடையவனும், நரகர்களையும் தேவர்களாக்க வல்லவனும், அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானுக்கு உரிய முரசம் தன் மீது அமர்த்தி முழங்கப்பட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட, தன் முன்னர் நின்று வணங்கி அன்பர்கள் துதிக்கப் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூரை உகந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆவான்.
34 | நீறுமெய் பூசவல் லானு ஏறுகந் தேறவல் லானும் நாறு கரந்தையி னானு ஆறு சடைக்கரந் தானு |
4.004.3 |
திருமேனியில்திருநீற்றைப் பூசுதலில் மேம்பட்டவனும், தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் உள்ளத்து இருப்பவனும், காளையை விரும்பி இவர வல்லவனும், தீயின் நிறத்தை ஒத்த திருமேனி நிறத்தினனும், நறுமணம் கமழும் கரந்தைப் பூச்சூடியவனும், வேதம் ஓதும் குரல்வளையை உடையவனும் கங்கையைச் சடையில் மறைத்தவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.
35 | கொம்புநல் வேனி லவனைக் செம்புநல் கொண்டெயின் மூன்றுந் வம்புநற் கொன்றையி னானும் அம்பர வீருரி யானு |
4.004.4 |
குயிலை ஊதுகொம்பாக உடைய சிறந்த இளவேனிற்காலத்திற்கு உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும், நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும், நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான். இது மொழிமாற்றுப் பொருள்கோள்.
36 | ஊழி யளக்கவல் லானு தாழிளஞ் செஞ்சடை யானுந் தோழியர் தூதிடை யாடத் ஆழி வளைக்கையி னானு |
4.004.5 |
ஊழிக்காலங்களைத் தான் அளக்கவல்ல, காலங்களுக்கு அப்பாற்பட்டவனும், தன்னை விரும்பும் அடியவர்கள் தலையின்மேல் உள்ளவனும், தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினனும், குளிர்ச்சிபொருந்திய வலிய கொடியை உடையவனும், தோழிமார்கள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சக்கரத்தையும் சங்கையும் தாங்குகிற திருமாலின் கையிற் காட்சியளிப்பவனும் திருவாரூர் அமர்ந்த அம்மானாவான். தண்ணம்ஆர் என்று பாடம் ஓதி மழுப்படையின் வடிவம் எழுதிய என்றும் பொருள் கொள்க. தண்ணம் - மழு. (கழ. த. அக. பக்.512)
37 | ஊர்திரை வேலையுள் ளானு சீர்தரு பாடலுள் ளானுஞ் வார்தரு பூங்குழ லாளை ஆர்திரை நாளுகந் தானு |
4.004.6 |
பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.
38 | தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் கழற்கங்கை பன்மலர் கொண்டு குழற்கங்கை யாளையுள் வைத்துக் அழற்கங்கை யேந்தவல் லானு |
4.004.7 |
தொழுவதற்குஉள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கும் அடியவர்கள் மனக்கண்முன் தோன்றி அருள் செய்ய வல்லவனும், தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு உள்ளங்கைகளிற் பல பூக்களையும் கொண்ட அடியார்களுக்கு அன்புமிகுமாறு நிற்பவனும், கூந்தலை உடைய கங்கையை அழகிய சடையில் வைத்து மறைத்தவனும், தீயினைத் தாங்கத் தன் உள்ளங்கையை நீட்டி ஏற்று ஏந்தும் ஆற்றல் உடையவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.
39 | ஆயிரந் தாமரை போலும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் பேருகந் தானு |
4.004.8 |
ஆயிரம்தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும, ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.
40 | வீடரங் காநிறுப் பானும் ஓடரங் காகவைத் தானும் காடரங் காமகிழ்ந் தானுங் ஆடரங் கத்திடை யானு |
4.004.9 |
முத்தி உலகை ஞான ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும், தன் முடியைக் காண்பதற்குப் பிரமன் வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், பல ஊழிக் காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் தன்னை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.
41 | பையஞ் சுடர்விடு நாகப் கையஞ்சு நான்குடை யானைக் பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் ஐயஞ்சி னப்புறத் தானு |
4.004.10 |
படமெடுக்கும் அழகிய ஒளியை வெளிப்படுத்துகின்ற பாம்பில் பள்ளி கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும், இருபது கைகளை உடைய இராவணனைத் தன் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனும், பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்வானும், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்து நிற்பவனும் ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.004.திருவாரூர் , மானே, உடையவனும், அமர்ந்த, ரமர்ந்தவம், ஆரூர், உடைய, ஆயிரம், ஆவான், தானுமாரூ, திருவாரூர், வல்லவனும், உள்ளவனும், தான், திருமுறை, தன்னை, ஆடும், அம்மான், நீண்ட, கூந்தலை, கொண்டு, எழுதிய, வடிவம், அடியவர்கள், பதிகங்கள், கொடியை, அருள், நிற்பவனும், கொள்பவனும், நான்காம், அரங்கமாகக், தேவாரப், யானும்ஆயிரம், அழகிய, அம்மானேயாவான், விரும்பும், திருச்சிற்றம்பலம், மறைத்தவனும், உரிய, நரியைக், சடையில், கமழும், இருப்பவனும், விரும்பி, நறுமணம், இளைய, யானுமாரூ, கண்களை, அம்மானே, யாவான், அழியுமாறு, ஆற்றல், உகந்தருளியிருக்கும், சிறந்த, சடைக்கரந்