நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.030.திருக்கழிப்பாலை
4.030.திருக்கழிப்பாலை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
294 | நங்கையைப் பாகம் வைத்தார் |
4.030.1 |
கழிப்பாலை யிற் கடற்கரைத் தலைவராக (சேர்ப்பன்) உள்ள பெருமான் பார்வதிபாகராய், சிவஞானத்தை வழங்குமாறு உபதேசிப்பவராய், உள்ளங்கையில் தீயை ஏந்தியவராய், யானைத் தோலைப் போர்த்தவராய், ஒருகையில் யாழை ஏந்தியவராய், அந்தணர் கோலத்திற்கேற்பத் தாமரைப்பூ அணிந்தவராய், கங்கையைச் சடையில் வைத்தவராய் உள்ளார்.
295 | விண்ணினை விரும்ப வைத்தார் |
4.030.2 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும், வேள்விகளை நிகழ்த்துமாறும், பண்களைப் பாடுமாறும், திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர். நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர்.
296 | வாமனை வணங்க வைத்தார் |
4.030.3 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் தம்சத்தியாகிய பெருமாட்டியை எல்லோரும் வணங்குமாறு செய்தவர். எல்லோர்க்கும் வாழ்த்துவதற்காம் வாயை அருளியவர்.பிறையைச் சடையில் சூடி அடியார்களுடைய ஆன்மசொரூபமான ஒளியில் தம் ஞான ஒளியை வைத்து, பசு நெய்யால் தம்மை அபிடேகம் செய்யும் வாய்ப்பினை அடியர்க்கு நல்கி, அன்பென்னும் தொடர்பு சாதனத்தையும் ஆக்கிவைத்தார். அத்துடன் மன்மதனை வெகுண்டு சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணராய் உள்ளார்.
297 | அரியன வங்கம் வேத பெரியன புரங்கண் மூன்றும் பரியதீ வண்ண ராகிப் கரியதோர் கண்டம் வைத்தார் |
4.030.4 |
அந்தணர்களுக்கு வேத வேதாங்கக் கல்வியும் சீவ காருணியமும் வழங்கிய கழிப்பாலைச் சேர்ப்பனார் பெரிய மும்மதில்களும் நெருப்பு உண்ணச் செய்து, பெரிய தீயைப்போல ஞானஒளி வீசுபவராய், பவளம் போன்ற செந்நிறத்தினராய் நீலகண்டராய் உள்ளார்.
298 | கூரிருள் கிழிய நின்ற பேரிருள் கழிய மல்கு ஆரிரு ளண்டம் வைத்தார் காரிருள் கண்டம் வைத்தார் |
4.030.5 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் இருட்டை விரட்டும் கொடிய மழுவினைக் கையில் கொண்டு, பெரிய இருள் நீங்க ஒளி வீசும் பிறையையும் கங்கையையும் சடையில் வைத்து, எல்லா உலகங்களையும் தம் மாயையாகிய இருளுக்குள் வைத்து அறுவகைச் சமயங்களைப் படைத்து, நீலகண்டராய் விளங்குகிறார்.
299 | உட்டங்கு சிந்தை வைத்தா விட்டங்கு வேள்வி வைத்தார் நட்டங்கு நடமும் வைத்தார் கட்டங்கந் தோண்மேல் வைத்தார் |
4.030.6 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் தம்மையே தியானிப்பவருக்கு அதற்கு ஏற்ற அலைவில்லாத மனத்தை அருளி அதனைத் தாம் உள்ளே தங்கும் இருப்பிடமாக வைத்தவர். தேவர்கள் விரும்பித் தங்கி அவி நுகரும் வேள்விகளையும் அவற்றால் நாட்டில் கொடிய துயர் நீங்குதலையும் அமைத்தவர். நள்ளிருளில் கூத்தாடும் பெருமான் ஞானத்துக்கு உரிய நூல்களைப் பயிலும் ஆற்றலை நாவில் அமைத்துக் கொடுத்தவர். தம் தோள்மேல் கட்டங்கப் படையைக் கொண்டுள்ளார்.
300 | ஊனப்பே ரொழிய வைத்தார் |
4.030.7 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் புலால் மயமான இவ்வுடல் தொடர்பான பெயர்கள் நீங்கத் தம் அடியவர் என்ற பெயரை வழங்கி, ஞானநூல்களை ஓதியே ஞானம் பெறும் வழியை வைத்து, ஞான தேகத்திற்குரிய கடவுளை நினைப்பூட்டும் ஞானப்பெயரையே சொல்லி அழைக்குமாறும் செய்து திருவடி ஞானத்தையும் அந்த ஞானம் தங்குதற்குரிய இதயத்தையும் நல்கி, கங்கையைச் சடையில் வைத்து, திருமாலுக்குச் சக்கரம் நல்கித் திருக்கானப்பேர் என்ற திருத்தலத்தைத் தாம் விரும்பி உறையும் இடமாகக் கொண்டுள்ளார்.
301 | கொங்கினு மரும்பு வைத்தார் சங்கினுண் முத்தம் வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் |
4.030.8 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் அரும்பில் மகரந்தத்தை வைத்தவர். தீயவார்த்தைகள் பேசுதலைப் போக்க திருமுறை ஓதுதலான நல்ல வழியை வைத்தவர். சங்கினுள் முத்துக்களை வைத்தவர். தாம் பூசத் திருநீற்றைப் பொருளாகக் கொண்டவர். உலகம் உய்ய நால்வேதமும் அங்கமும் பரவச் செய்தவர். உலகம் உய்ய விடம் உண்டவர். மகிழ்வாக உறங்க இரவையும், செயற்பட்டு உழைக்கப் பகற்பொழுதையும் அமைத்தவர்.
302 | சதுர்முகன் றானுமாலுந் எதிர்முக மின்றி நின்ற |
4.030.9 |
கழிப்பாலைச் சேர்ப்பனார் பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு, கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார். கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார். பிறையைச் சடையில் வைத்தவருமானார்.
303 | மாலினா ணங்கை யஞ்ச வேலினான் வெகுண்டெ டுக்கக் நூலினா னோக்கி நக்கு காலினா லூன்றி யிட்டார் |
4.030.10 |
மதில்களை உடைய இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் என்ற, வேல் ஏந்திய வீரன் கோபங்கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க, அதுகண்டு தம்மிடம் பெருவிருப்புடைய பார்வதி அஞ்ச, அதனைக்கண்ட அளவில் வேதங்களை ஓதுபவனும் பூணூல் அணிந்தவனுமாகிய அவ்விராவணனை மனத்தால் நோக்கி, அவன் ஒரு நொடியில் ஆற்றலிழந்து மலையடியில் விழுமாறு, கால் விரலால் அவனை அழுத்தி நசுக்கிவிட்டவர் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.030.திருக்கழிப்பாலை , கழிப்பாலைச், வைத்தார்கழிப்பாலைச், சேர்ப்பனார், னாரே, சடையில், சேர்ப்ப, வைத்து, வைத்தவர், சேர்ப்பனாரே, திருமுறை, செய்தவர், பெரிய, தாம், உள்ளார், திருக்கழிப்பாலை, வைத்தார், உலகம், உய்ய, நாவில், கொடிய, உடைய, வழியை, கொண்டுள்ளார், ஓதியே, அமைத்தவர், ஞானம், கையில், பிறையைச், திருச்சிற்றம்பலம், நவில, பதிகங்கள், தேவாரப், நான்காம், பெருமான், ஏந்தியவராய், கண்டம், செய்து, நல்கி, திருவடி, கங்கையைச், நீலகண்டராய்