நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.112.சரக்கறை

4.112.சரக்கறை
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1039 | விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் உடையு முடைதலை மாலையு மாலைப் சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.1 |
பகைவரோடு போரிடும் காளையை இவரும் பெரிய பாகனே! அடியேன் வேண்டி உரைப்பது இது. கொடிய மழுவாள் ஆகிய படையும், படைகளாய் வரிசைப் படுத்தப்பட்ட பெரிய பூதங்களும், பாய்கின்ற புலியின் தோலாகிய ஆடையும், உடைந்த தலைகளால் ஆகிய மாலையும், மாலையில் தோன்றும் வளர்பிறை தங்கும் சடைமுடியும் தங்கியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிமையை விரும்பும் நெஞ்சம்?
1040 | விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்ப சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் அந்திப் பிறையு மனல்வா யரவும் சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.2 |
உயரத்தில் மேம்பட்ட பெரிய பக்க மலைகளை உடைய கயிலை மலையானே! காதுகளில் விளங்கும் சங்கினாலாகிய காதணியும், வளைவாக உடுக்கப்பட்ட கோவணமும், உடுக்கையும், அந்தியில் தோன்றும் வளர்பிறையும், விடத்தை உடைய வாயதாகிய பாம்பும் ஆகிய எல்லாம் கலந்து கூடியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1041 | வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்ப சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.3 |
இறந்தவர் தலையைப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக ஏந்தி இருப்பவனே! திருமேனியில் விளங்கும் சந்தனம் போன்ற வெள்ளிய திருநீறும், தகுணிச்சம் என்ற இசைக்கருவியும், பூத்த தாமரை போன்ற திருமேனியில் அணிந்துள்ள புள்ளிகளை உடைய மான்தோலும் புலித்தோலும் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1042 | வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்ப வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் நஞ்சமா நாக நகுசிர மாலை தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் |
4.112.4 |
கொடிய போரிட வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவனே! தலையிலே விளங்குகின்ற வஞ்சனையாக வந்த நீரை உடைய கங்கையும், வானில் உலவும் பிறையும், விடத்தை உடைய பெரிய பாம்பும், சிரிக்கின்ற தலைகளால் ஆகிய மாலையும், பிச்சை எடுக்க உதவும் மண்டையோடும் வாழும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1043 | வேலைக் கடனஞ்ச முண்டாயென் விண்ணப்ப காலற்க டந்தா னிடங்கயி லாயமுங் மாலைப் பிறையு மணிவா யரவும் சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.5 |
கரையை உடைய பாற்கடலினின்றும் தோன்றிய விடத்தை அருந்தியவனே! கூற்றுவனை அழித்த உன்னுடைய கயிலாய மலையும், தலைமேலே விளங்கும் விருப்பம் மருவிய கொன்றை மாலையும் அதனோடு தோன்றும் பிறையும், அழகிய வாயை உடைய பாம்பும் எல்லாம் பெரிதும் கலந்து கிடக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1044 | வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்ப சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் தாழிட் டிருக்கும் சரக்கறை யோவென் |
4.112.6 |
விரும்பப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே! தலையில் விளங்கும் ஒளி சூழ்ந்த சூளாமணி என்னும் தலைக்கு அணியும் மணி ஆபரணமும், சுடுகாட்டுச் சாம்பலும், எழு கோவையாக அமைக்கப்பட்ட சிறந்த அக்கு மணிமாலையும், பாம்பும், எலும்பும், ஆமையோடும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1045 | விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்ப தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் தண்டா ரிருக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.7 |
பகைவருடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! உன் மேல் விளங்கும் விருப்பம் மருவிய கொன்றையாகிய குளிர்ந்த மாலையும், தொண்டு செய்யும் அடியவர்களுடைய பாத தூளியும், தொழுது உன் திருவடியைத் தியானிப்பவர்கள் தரிசித்துக் கொண்டிருக்கும் கயிலாய மலையும் பொருந்தியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1046 | விடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப கொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம் வடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும் தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் |
4.112.8 |
அடக்கமின்றி வேண்டியவாறு திரியுமாறு விடப்பட்ட பட்டிக்காளையை விரும்பி வாகனமாகக் கொள்பவனே! கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை என்ற இசைக்கருவிகளும், உன் திருமேனியில் விளங்கும் கொன்றை வன்னி ஊமத்தம்பூ, பாம்பு என்பனவும் குணலைக் கூத்தாடும் கருவூலமோ அடியேன் தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1047 | வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்ப கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் |
4.112.9 |
வெள்ளிய அலைகளை உடைய கங்கையைச் சடையில் ஏந்திய வேறுபட்டவனே! மார்பின் மேல் விளங்கும் கண்டிகையைக் கழுத்தில் பூண்டு, அரை நாண் கயிற்றின்மீது தலைகளை இணைத்த தலைமாலையை அணிந்து, நீர்ப்பாத்திரம், கொக்கரை என்ற இசைக்கருவி, வளைந்த பிறை, குட்டையான வடிவத்தை உடைய பூதப்படை இவற்றைப் பெருமானாகிய நீ சேகரித்து வைத்துள்ள சரக்கறையோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன்.
1048 | வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்ப சோதித் திருக்குநற் சூளா மணியுஞ் பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.10 |
பகைவர் உடலைப் பிளக்கும் வெள்ளிய மழுப்படையை ஆள்பவனே! தலைமேல் விளங்கும் ஒளியுடைய சூளா மணியும், சுடுகாட்டுச் சாம்பலும், சிறுபிறையும், துண்டமான மண்டையோடும், பாயும் புலித்தோலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சரக்கறை அன்றோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன்.
1049 | விவந்தா டியகழ லெந்தாயென் விண்ணப்ப தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் |
4.112.11 |
மற்றவர்களோடு மாறுபட்டு வந்து ஆடிய திருவடிகளை உடைய எம் தலைவனே! முற்பிறவிகளில் செய்து விளங்கிய தவத்தானாகிய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட அவனுடைய பத்துத் தலைகளையும் சிதைத்தாய். முழந்தாளவு தாழ்ந்த புலியின்தோலும் செம்மேனியில் பூசப்பட்ட வெண் திருநீறும், தலைமாலையும் சூடிக் கொண்டு நீ தவ நிலையில் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிநெஞ்சம் என்பதனை விண்ணப்பம் செய்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.112.சரக்கறை , சரக்கறை, யோவென்றனிநெஞ்சமே, உடைய, அடியேனுடைய, நெஞ்சம், கருவூலமோ, விளங்கும், விண்ணப்பிக்கிறேன், பாம்பும், மாலையும், ஆகிய, பெரிய, கொக்கரை, செய்கிறேன், சூளா, விடத்தை, திருமேனியில், திருமுறை, விண்ணப்பம், தோன்றும், வந்த, வெள்ளிய, கொன்றை, பிறையும், மருவிய, விருப்பம், மலையும், சுடுகாட்டுச், சேகரித்து, தக்கை, மேல், வைக்கப்பட்டிருக்கும், சாம்பலும், கயிலாய, பூண்டு, கலந்து, மிருக்குஞ், அடியேன், கொடிய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், தலைகளால், பிறையு, புலித்தோலும், இருக்கும், திருநீறும், பிச்சை, திருக்குஞ், எல்லாம், மண்டையோடும்