முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.098.திருச்சிராப்பள்ளி
1.098.திருச்சிராப்பள்ளி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர்.
தேவியார் - மட்டுவார்குழலம்மை.
1058 |
நன்றுடையானைத் தீயதிலானை றொன்றுடையானை யுமையொருபாக சென்றடையாத திருவுடையானைச் குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் |
1.098.1 |
நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடு பேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.
1059 |
கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் செம்முகமந்தி கருவரையேறுஞ் வெம்முகவேழத் தீருரிபோர்த்த பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் |
1.098.2 |
சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரிய மலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப்பொருளாகிய பிறை மதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழிதரும் செயல் அன்றோ?
1060 |
மந்தம்முழவம் மழலைததும்ப செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சந்தம்மலர்கள் சடைமேலுடையார் எந்தம்மடிக ளடியார்க்கல்ல |
1.098.3 |
மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.
1061 |
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் கறைமல்குகண்டன் கனலெரியாடுங் பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் |
1.098.4 |
பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீல மலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறை பொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.
1062 |
கொலைவரையாத கொள்கையர்தங்கண் சிலைவரையாகச் செற்றனரேனுஞ் தலைவரை நாளுந் தலைவரல்லாமை நிலவரைநீல முண்டதும்வெள்ளை |
1.098.5 |
பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்டதுகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?
1063 |
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை |
1.098.6 |
எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள்சிவந்த பொன் போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.
1064 |
வேயுயர்சாரற் கருவிரலூகம் சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் |
1.098.7 |
கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார் பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு. சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.
1065 |
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் |
1.098.8 |
மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண்கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?
1066 |
அரப்பள்ளியானு மலருறைவானு கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா |
1.098.9 |
பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்துஉயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக் கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?
1067 |
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி ஊணாப்பகலுண் டோதுவோர்க பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று |
1.098.10 |
நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர் எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.
1068 |
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் கானல்சங்கேறுங் கழுமலவூரிற் ஞானசம்பந்த னலமிகுபாட வானசம்பந்தத் தவரொடுமன்னி |
1.098.11 |
தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.098.திருச்சிராப்பள்ளி , உடைய, சிராப்பள்ளியில், கொண்டு, செல்வராகிய, கொண்டுள்ள, பெருமானார், திருச்சிராப்பள்ளி, திருமுறை, சிராப்பள்ளி, சிராப்பள்ளிக், பொருந்திய, தலையோட்டில், செல்வனார், சிராப்பள்ளிமேய, ஆடும், தோறும், விளையாடும், விரும்பும், தாமரை, உறையும், யாதோ, நீர், சென்று, சிவபிரான், மேவிய, இவர்தம், தலைவராகிய, உடையவனை, தனது, மூங்கில், கொண்டவனை, தனக்கு, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், கரிய, கூடிய, பலவாகிய, வழிகளைக், விளங்கும், எழுந்தருளிய, தண்ணிய, ஆகிய, பிறை, இசைபாடும்