முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.097.திருப்புறவம்

1.097.திருப்புறவம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1047 |
எய்யாவென்றித் தானவரூர்மூன் மையார்கண்டன் மாதுமைவைகுந் செய்யான் வெண்ணீறணிவான் றிகழ்பொற் பொய்யாநாவி னந்தணர்வாழும் |
1.097.1 |
பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும் சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன், உமையம்மையை ஒருகூறாகக் கொண்டு எழுந்தருளும், செய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும்.
1048 |
மாதொருபாலு மாலொருபாலும் நாதனென்றேத்து நம்பரன்வைகுந் மாதவிமேய வண்டிசைபாட போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் |
1.097.2 |
குருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும், அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரிந்த மலர்களின் மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கைவளம் சான்ற புறவம் என்னும் பதி, உமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான தலைவன் வைகும் நகராகும்.
1049 |
வற்றாநதியும் மதியும் பொதியுஞ் புற்றாரரவின் படமாடவுமிப் பற்றாயிடுமின் பலியென்றடைவார் பொற்றாமரையின் பொய்கைநிலாவும் |
1.097.3 |
என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல் புற்றை இடமாகக் கொண்ட பாம்பு படத்துடன் ஆட, இவ்வுலகிற்கு ஒரு பற்றுக்கோடாகி, எனக்குப் பலி இடுமின் என்று பல ஊர்களுக்கும் செல்லும் சிவபிரானது பதி, அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்.
1050 |
துன்னார்புரமும் பிரமன்சிரமுந் மின்னார்சடைமே லரவும்மதியும் பன்னாளிடுமின் பலியென்றடைவார் பொன்னார்புரிநூ லந்தணர்வாழும் |
1.097.4 |
பகைவர்களாகிய திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும், பிரமனின் தலைகளில் ஒன்றையும் அழித்து, மின்னல் போல் ஒளி விடும் சடைமுடி மேல் பாம்பும் மதியும் பகை நீங்கி விளையாடுமாறு சூடிப் பல நாள்களும் சென்று பலியிடுமின் என்று கூறித் திரிவானாகிய சிவபிரானது பதி, பொன்னாலியன்ற முப்புரி நூலை அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்.
1051 |
தேவாவரனே சரணென்றிமையோர் காவாயென்று வந்தடையக்கார் பாவார்மறையும் பயில்வோருறையும் பூவார்கோலச் சோலைசுலாவும் |
1.097.5 |
பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விடத்தின் கொடுமை தாங்காது, தேவர்கள் திசைதோறும் சூழ்ந்து நின்று தேவனே! அரனே! உனக்கு அடைக்கலம் எங்களைக் காவாய் எனச் சரண் அடைய, அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு, பாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும் சிவபெருமான் வாழும் பதி, மலர்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.
1052 |
கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் அற்றர னேநின் னடிசரணென்னு பற்றதுவாய பாசுபதன்சேர் பொற்றிகழ்மாடத் தொளிகள் நிலாவும் |
1.097.6 |
மெய்ந்நூல்களைக் கற்று, அதனால் நல்லறிவும் பெற்று, காமனாகிய மன்மதனின் குறிப்பினால் ஆகும் காமவிருப்பமெல்லாம் அற்று, அரனே! நின் திருவடிகளே சரண் என்று கூறும் அடியவர்கட்குப் பற்றுக்கோடாய்ப் பாசுபதன் எழுந்தருளிய பதி, பொன் நிறைந்து விளங்கும் மாடவீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும் என்பர்.
1053 |
எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் கொண்டெழுகோல முகில்போற்பெரிய பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் |
1.097.7 |
எண்திசையில் உள்ளாரும் அஞ்சிடுமாறு கரிய மலைபோலவும், நீரை முகந்து கொண்டெழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த பெரிய களிற்று யானையை முற்காலத்தில் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான் விரும்பியிருக்கும் பதி,தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும் புறவமாகும்.
1054 |
பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் அரக்கன்றிண்டோ ளழிவித்தானக் புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் |
1.097.8 |
எங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற படையை, ஊழித் தீப் போன்று அழிக்கும் தொழிலில் வல்ல இராவணனின் வலிய தோள் வலியை அக்காலத்தில் அழித்தருளி, அனைத்து உலகங்களையும் புரந்தருளும் வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய பழமையான ஊர் புறவமாகும்.
1055 |
மீத்திகழண்டந் தந்தயனோடு மூர்த்தியை நாடிக் காணவொணாது கேத்தவெளிப்பா டெய்தியவன்ற பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் |
1.097.9 |
மேலானதாக விளங்கும் உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட திருமாலும் அழலுருவாய் வெளிப்பட்ட சிவமூர்த்தியின் அடிமுடிகளைக்காண இயலாது தமது முயற்சியைக் கைவிட்டு ஏத்த, அவர்கட்குக் காட்சி தந்தருளிய சிவபிரானது இடம், மலர்கள் நிறைந்த சோலைகளில் தென்றல் வந்து உலாவும் புறவமாகும்.
1056 |
வையகநீர்தீ வாயுவும்விண்ணும் மெய்யலதேர ருண்டிலையென்றே கையினிலுண்போர் காணவொணாதான் பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் |
1.097.10 |
மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின் முதலாக விளங்கும் இறைவனாய், உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற உரைகளால் அத்தி நாத்தி எனக் கூறிக் கொண்டு தம் கைகளில் உணவேற்று உண்போராய சமணரும், புத்தரும் காண ஒண்ணாத சிவபிரானின் நகர், நெஞ்சிலும் பொய்யறியாத பூசுரர் வாழும் புறவமாகும்.
1057 |
பொன்னியம்மாடப் புரிசைநிலாவும் மன்னியவீசன் சேவடிநாளும் தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட் |
1.097.11 |
பொன்னால் இயன்ற மாடங்களின் மதில்கள் சூழ்ந்த, புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின் சேவடிகளை, நாள்தோறும் பணிந்து, சீவபோதம் அற்றுச் சிவபோதம் உடையவனாய்ப் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.097.திருப்புறவம் , புறவம்மே, விளங்கும், என்னும், புறவமாகும், வாழும், திருப்புறவம், புறவம், பதிபோலும், அழகிய, பதியாகும், திருமுறை, சூழ்ந்த, சிவபிரானது, கொண்டு, கரிய, அந்தணர்கள், உடைய, பழமையான, மலர்கள், உண்டு, சிவபிரானின், நிறைந்த, பதியென்பர், நிறைந்து, சிவபிரான், எழுந்தருளிய, வல்ல, பாகமாகவும், அசுரர்களின், உமையம்மையை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், மகிழ்கின்ற, மதியும், அரனே, மேல், நீர், பலியென்றடைவார், சரண்