முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.044.திருப்பாச்சிலாச்சிராமம்

1.044.திருப்பாச்சிலாச்சிராமம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர்.
தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.
முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின் மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.
470 |
துணிவளர்திங்கள்
துளங்கிவிளங்கச் பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி மணிவளர்கண்டரோ மங்கையைவாட |
1.044.1 |
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லி மழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
471 |
கலைபுனைமானுரி தோலுடையாடை தலையணிசென்னியர் தாரணிமார்பர் அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி இலைபுனைவேலரோ வேழையைவாட |
1.044.2 |
மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர்செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?
472 |
வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் |
1.044.3 |
உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக் காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?
473 |
கனமலர்க்கொன்றை
யலங்கலிலங்கக் புனமலர்மாலை யணிந்தழகாய வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி மனமலிமைந்தரோ மங்கையைவாட |
1.044.4 |
கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?
474 |
மாந்தர்தம்பானறு
நெய்மகிழ்ந்தாடி மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி சாந்தணிமார்பரோ தையலைவாடச் |
1.044.5 |
மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?
475 |
நீறுமெய்பூசி நிறைசடைதாழ ஆறதுசூடி யாடரவாட்டி பாறருமேனியர் பூதத்தர்பாச்சி ஏறதுவேறிய ரேழையைவாட |
1.044.6 |
திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூத கணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?
476 |
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ கொங்கிளமாலை புனைந்தழகாய அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் |
1.044.7 |
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
477 |
ஏவலத்தால்விச யற்கருள்செய்து மூவரிலும்முத லாய்நடுவாய யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் |
1.044.8 |
அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?
478 |
மேலதுநான்முக னெய்தியதில்லை நீலதுவண்ணனு மெய்தியதில்லை ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் |
1.044.9 |
மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?
479 |
நாணொடுகூடிய சாயினரேனு ஊணொடுகூடிய வுட்குநகையா ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் |
1.044.10 |
நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச் சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ள வேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச் செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
480 |
அகமலியன்பொடு தொண்டர்வணங்க புகைமலிமாலை புனைந்தழகாய நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் |
1.044.11 |
உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண்பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள் சாரா.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.044.திருப்பாச்சிலாச்சிராமம் , மத்துறைகின்ற, லாச்சிரா, அணிந்த, சூழ்ந்த, திருப்பாச்சிலாச்சிராமத்து, இவர், அணிந்து, உறைகின்ற, சிவபிரான், செய்து, உறையும், அழகிய, இப்பெண்ணை, ஆகிய, திருமுறை, பால், திருப்பாச்சிலாச்சிராமம், வாடுமாறு, சூடி, செய்வது, லாமிவரென்ன, திருப்பாச்சிலாச்சிராமத்தில், உடைய, விளங்கும், இறைவர், நிறைந்த, செயல், சொல்லும்படி, ஏற்ற, கொன்றை, ஞானசம்பந்தன், விளங்க, மலர்ந்த, பூதத்தர்பாச்சி, விவர்சார்வே, சூழ்ந்தவராய்த், எல்லோராலும், வாடச், புனைந்தழகாய, உள்ள, ஆகுமோ, வாடும்படி, வெண்ணூல், பூதங்கள், விவர்மாண்பே, சென்று, மழவன், மகளாகிய, மயல்செய்வதோ, மங்கையைவாட, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், கொல்லி, மாண்பாகுமோ, விடர்செய்வதோ, அன்போடு, சிதைசெய்வதோ, கொண்டு, தோயும், சிவபெருமான், சூழ்தருபாச்சி, பெருமைக்குப், விவரீடே, ஆகியன, மாலை, பொழில்கள், புனிதர்கொ