பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:। த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞை: கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத்॥ 15.5 ॥ |
அகங்காரமும் மனமயக்கமும் நீங்கிய, பற்று என்னும் குற்றத்தை வென்ற, ஆன்ம உணர்வில் நிலை பெற்ற, ஆசைகளை விட்ட, இன்ப துன்பம் போன்ற இருமைகளிலிருந்து விடுபட்ட குழப்பம் இல்லாத மகான்கள் அழிவற்ற அந்த நிலையை அடைகின்றனர்.
ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக:। யத்கத்வா ந நிவர்தம்தே தத்தாம பரமம் மம॥ 15.6 ॥ |
எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய மேலான இருப்பிடம், அந்த இடத்தை சூரியனும், சந்திரனும், அக்னியும் விளக்குவது இல்லை.
மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:। மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி॥ 15.7 ॥ |
எனது அம்சமே உலகில் உயிர்களாக தோன்றி என்றென்றும் இருக்கிறது. இயற்கையில் நிலைபெற்றதும் மனத்தை ஆறாவதாக உடையதுமான புலன்களை எனது அம்சமே உலக இன்பங்களை நோக்கி இழுத்து செல்கிறது.
ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர:। க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கம்தாநிவாஷயாத்॥ 15.8 ॥ |
மனங்களுக்கு இருப்பிடமாகிய மலர்களிலிருந்து மனங்களை கிரகித்துகொண்டு காற்று செல்வது போல் ஜீவன் புதிய உடலை எடுக்கும் போதும் பழைய உடலை விடும் போதும் புலன்களையும் மனத்தையும் பற்றிக்கொண்டு போகிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, அத்தியாயம், பதினைந்தாவது, ஸ்ரீமத், புருஷோத்தம, யோகம், அம்சமே, உடலை, போதும், எனது, இந்து, gita, bhagavad, அந்த