பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத பம்சதஷோ அத்யாய:। புருஷோத்தம யோகம்(வாழ்க்கை மரம்) |
ஸ்ரீபகவாநுவாச। |
ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்। சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: மேலே வேர் உள்ளதும் கீழே கிளைகள் உள்ளதுமாகிய அரசமரத்தை அழிவற்றதாக கூறுகின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அந்த மரத்தை யார் அறிகிறானோ அவன் உண்மையை அறிந்தவன்.
அதஷ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஷாகா
குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:। அதஷ்ச மூலாந்யநுஸம்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே॥ 15.2 ॥ |
அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்களாக தளிர்விட்டு கீழும் மேலும் படர்ந்து இருக்கின்றன. அதன் விழுதுகள் மானிட உலகில் செயல்களை விளைவிப்பவனாய் கீழ் நோக்கி பரவியிருக்கின்றன.
ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா। அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூலம் அஸங்கஷஸ்த்ரேண த்ருடேந சித்த்வா॥ 15.3 ॥ |
இங்கே அதன் உருவமோ அதன் முடிவோ ஆரம்பமோ தென்படுவதில்லை. அதற்கு நிலைத்த தன்மையும் இல்லை. நன்றாக வேரூன்றிய இந்த அரச மரத்தை பற்றின்மை என்னும் திடமான வாளால் வெட்டி வீழ்த்தவேண்டும்.
தத: பதம் தத்பரிமார்கிதவ்யம்
யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:। தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே। யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ॥ 15.4 ॥ |
எங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லையோ அந்த இடத்தை தேடவேண்டும். ஆரம்பத்தில் படைப்பு யாரிடமிருந்து தோன்றியதோ, அந்த முதல்வனான இறைவனையே சரணடைய வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், புருஷோத்தம, பகவத்கீதை, அத்தியாயம், அந்த, பதினைந்தாவது, ஸ்ரீமத், bhagavad, மரத்தை, கிளைகள், ஸ்ரீ, இந்து, gita