பாடல் 947 - திருப்புக்கொளியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தந்ததான |
மதப்பட்டவி சாலக போலமு முகப்பிற்சன வாடையு மோடையு மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி வயிற்றுக்கிடு சீகர பாணியு மிதற்செக்கர்வி லோசன வேகமு மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல விதப்பட்டவெ ளானையி லேறியு நிறைக்கற்பக நீழலி லாறியும் விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம் விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு பிரப்புத்வகு மாரசொ ரூபக வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே இதப்பட்டிட வேகம லாலய வொருத்திக்கிசை வானபொ னாயிர மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள இசைக்கொக்கவி ராசத பாவனை யுளப்பெற்றொடு பாடிட வேடையி லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற் றிதப்பட்டெதி ரேபொதி சோறினை யவிழ்த்திட்டவி நாசியி லேவரு திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன் செறிப்பித்த கராவதின் வாய்மக வழைப்பித்தபு ராணக்ரு பாகர திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே. |
* சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 947 - திருப்புக்கொளியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, சுந்தரர், வந்து, தனத்தத்தன, சென்ற, திருப்புக்கொளியூர், பாலகனை, கரையில், ஓராண்டு, முதலை, ஏரியில், இருந்த, கொண்ட, தம்பிரானே, உடைய, மேல், தோன்றி, கொண்டு, என்னும்