பாடல் 939 - பட்டாலியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனனத் தான தானன தனதன தனனத் தான தானன தனதன தனனத் தான தானன ...... தனதான |
இருகுழை யிடறிக் காது மோதுவ பரிமள நளினத் தோடு சீறுவ இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர எமபடர் படைகெட் டோட நாடுவ அமுதுடன் விடமொத் தாளை யீருவ ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும் உருகிட விரகிற் பார்வை மேவுவ பொருளது திருடற் காசை கூறுவ யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல் உயிர்வதை நயனக் காதல் மாதர்கள் மயல்தரு கமரிற் போய்வி ழாவகை உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே முருகவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி மாமயில் முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே முரண்முடி யிரணச் சூலி மாலினி சரணெனு மவர்பற் றான சாதகி முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம் பருகினர் பரமப் போக மோகினி அரகர வெனும்வித் தாரி யாமளி பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும் பறையறை சுடலைக் கோயில் நாயகி இறையொடு மிடமிட் டாடு காரணி பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே. |
இப்பாடலின் முதல் 10 வரிகள் வேசையரின் கண்களைப் பற்றிய வர்ணனை.* மயிலாகி முருகவேளுக்கு வாகனமாகத் தன் முற்பிறப்பில் சூரன் விரும்பினான்.
** இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 939 - பட்டாலியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தானன, தனனத், தனதன, மாலையை, வாகனம், உனக்கு, கொண்ட, செய்பவள், உடையவள், வீசும், பச்சை, பொருட்டு, அரகர, தாவி, காளி, பெருமாளே, இருக்கும், மணம், வாழும்