பாடல் 933 - திருப்பாண்டிக்கொடுமுடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தாந்தத் தனதன தாந்தத் தனதன தாந்தத் தனதன ...... தனதான |
காந்தட் கரவளை சேந்துற் றிடமத காண்டத் தரிவைய ...... ருடனூசி காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி காண்டற் கநுபவ ...... விதமேவிச் சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில் சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி தாங்கித் தழுவுத ...... லொழியேனோ மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர் வாஞ்சைப் படியருள் ...... வயலூரா வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை மான்சிற் றடிதொழு ...... மதிகாமி பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும் பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு பாண்சொற் பரவிய ...... பெருமாளே. |
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 933 - திருப்பாண்டிக்கொடுமுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்தத், தனதன, உள்ள, மேல், கொடுமுடி, பாண்டிக், பெருமாளே