பாடல் 849 - மருத்துவக்குடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன ...... தனதான |
கருத்தி தப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங் கரைத்து ரைத்திடு மோகா மோகிகள் அளிக்கு லப்பதி கார்போ லோதிகள் கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை உரைத்த புத்திகள் கேளா நீசனை யவத்த மெத்திய ஆசா பாசனை யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை யளிக்கு நற்பொரு ளாயே மாதவ வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே செருக்கி வெட்டிய தீயோ ராமெனு மதத்த துட்டர்கள் மாசூ ராதிய சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே சிவத்தை யுற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலா யோதிய செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா வரைத்த வர்க்கரர் சூலா பாணிய ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. |
* மருத்துவக்குடி ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 849 - மருத்துவக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, என்னை, தானன, தத்தன, தானா, பெரியோர்கள், பெற்ற, மூர்த்தியே, விளங்கும், ஆகிய, கொண்ட, பெருமாளே, வீணிகள், நத்திய, மூடனை, உயர்ச்சி, உடையவர்கள், தேசிக, மிகக்