பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ்

ராகம் -
மத்யமாவதி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தனனத்த தான தனனத்த தான தனனத்த தான ...... தனதான |
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை கரிமுத்து மாலை ...... மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை ...... யரவீனும் அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி னடைவொத்து லாவ ...... அடியேன்முன் அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே மழையொத்த சோதி குயில்தத்தை போலு மழலைச்சொ லாயி ...... யெமையீனு மதமத்த நீல களநித்த நாதர் மகிழ்சத்தி யீனு ...... முருகோனே செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை திருமுத்தி மாதின் ...... மணவாளா சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான திருமுட்ட மேவு ...... பெருமாளே. |
* திருமுட்டம் இப்போது 'ஸ்ரீமுஷ்ணம்' என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மாலை, முத்தாலான, தரும், தனனத்த, சக்தியாம், உடைய, கிடைக்கும், மேகம், மார்பி, பெருமாளே