பாடல் 689 - திருமயிலை - திருப்புகழ்

ராகம் -....;
தாளம் -
தனனத் தனதன ...... தனதான |
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே அமுதொத் திடுமரு ...... மொழியாலே சயிலத் தெழுதுணை ...... முலையாலே தடையுற் றடியனு ...... மடிவேனோ கயிலைப் பதியரன் ...... முருகோனே கடலக் கரைதிரை ...... யருகேசூழ் மயிலைப் பதிதனி ...... லுறைவோனே மகிமைக் கடியவர் ...... பெருமாளே. |
வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ? கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை முருகனே, கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும் திருமயிலைப்பதியில்* வீற்றிருப்பவனே, பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே.
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 689 - திருமயிலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எழுந்துள்ள, பெருமாளே