பாடல் 413 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன ...... தந்த தனதான |
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே காலடர வம்பமளி மேலடர வந்துபொரு காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவித்தது போன்று அமைந்தது.குயிலின் எக்காளம், தென்றல், மன்மதன், மலர்க்கணைகள், ஊராரின் ஆரவாரம் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 413 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தந்ததன, மீது, ஆரவாரம், மனம், மலையும், பெரிய, தென்றல், தந்த, பெருமாளே, எக்காளம், மன்மதன்