பாடல் 256 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ஆனந்த
பைரவி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தானம் தனதன தானம் தனதன தானம் ...... தனதான |
கலைமட வார்தஞ் சிலையத னாலுங் கனவளை யாலுங் ...... கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங் கருதலை யாலுஞ் ...... சிலையாலுங் கொலைதரு காமன் பலகணை யாலுங் கொடியிடை யாள்நின் ...... றழியாதே குரவணி நீடும் புயமணி நீபங் குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் ...... தொழும்வேலா தினைவன மானுங் கநவன மானுஞ் செறிவுடன் மேவுந் ...... திருமார்பா தலமகள் மீதெண் புலவரு லாவுந் தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா தனியவர் கூருந் தனிகெட நாளுந் தனிமயி லேறும் ...... பெருமாளே. |
* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு. தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 256 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, நாயகன், நாயன், தானம், மான், மீது, திருத்தணிகையில், பெருமாளே, யாலுங், கலைமகள், ஓசையாலும், மன்மதன்