பாடல் 249 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் -
மாயாமாளவகெளளை; தாளம் - ஆதி
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் ...... பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் ...... குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண் பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் ...... புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் ...... முருகோனே தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 249 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தானம், பொருளை, பெருமாளே, தனைக்கொடு, முருகோனே