பாடல் 215 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான |
கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர் யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர் காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ ராஜத லக்ஷண லக்ஷ¥மி பெற்றருள் ...... பெருமாளே. |
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** அக்கினி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாக அமைந்தான். ஆதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச, சூரனின் நிணக் குடல் நெருப்புக்கு இரையாயிற்று எனப் பொருள்படும். சூரன் இறந்த பின்தான் அவனது உடல் மயிலாகவும், சேவலாகவும் பிரிந்து முருகன்வசம் அடைக்கலம் ஆனது. பின்பு முருகனது கொடியில் அக்கினிக்குப் பதிலாக சேவல் வீற்றிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 215 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, என்னும், அழகிய, மலையிலும், தானன, குயில், கோழி, சிறந்த, சூரன், இருக்கின்ற, கற்று, மயில், மாமர, டுப்பவர், சூரனை, மாகிரி, பெருமாளே, ராஜத, காடை