பாடல் 179 - பழநி - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி ; தாளம்
- அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான |
போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் ஸாமீ நமோநம ...... அரிதான வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான மேனி தங்கிய வேளே நமோநம வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய் பாத கஞ்செறி சூரா திமாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே பாதி சந்திர னேசூ டும்வேணியர் சூல சங்கர னார்கீ தநாயகர் பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர் ஆதி சங்கர னார்பா கமாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 179 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, நிறைந்த, தனாதன, தானா, தந்தன, அணிந்த, அழகு, உடைய, தேவர்கள், சங்கர, தங்கிய, தகதிமி, வேளே, தகிட, பெருமாளே, தலைவனே