பாடல் 13 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ்

ராகம் -
ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனந் தத்தத் ...... தனதான தந்தனந் தத்தத் ...... தனதான |
சந்ததம் பந்தத் ...... தொடராலே சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும் கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா தென்பரங் குன்றிற் ...... பெருமாளே. |
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 13 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, பெருமாளே, தனதான, தத்தத், தந்தனந்