பாடல் 1285 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
வாசஸ்பதி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தானத் ...... தனதான |
கொடியமத வேள்கைக் ...... கணையாலே குரைகணெடு நீலக் ...... கடலாலே நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே கடியரவு பூணர்க் ...... கினியோனே கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே அடியவர்கள் நேசத் ...... துறைவேலா அறுமுகவி நோதப் ...... பெருமாளே. |
கொடுமை செய்யும் மன்மதனுடைய கரத்திலிருந்து விடும் மலர் அம்புகளாலே, அலை ஓசை மிகுந்து ஆரவாரிக்கும் பெரிய நீலக் கடலினாலே, நீண்டுயர்ந்த சோலையில் பாடிப் புகழ் பெற்ற குயிலினாலே, (உன்னைப் பிரிந்து) தன்னிலைமை கெட்டு நிலைகுலையும் மானொத்த இப்பெண்ணைத் தழுவமாட்டாயா? கடிக்கும் பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவனாருக்கு இனியவனே, ஆய கலைகள் அனைத்தையும் தெரிந்த உண்மை வித்தகனே, உன் அடியார்களின் பக்தியில் வாழ்கின்ற வேலனே, ஆறுமுகனே, திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், குயில், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1285 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, நீலக்