பாடல் 1278 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஆனந்த பைரவி
தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை - 25
தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை - 25
தனதனன தனதனன தனதனன தனதனன தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான |
விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டா£கச் சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1278 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, அழகு, நிறைந்த, பரிசுத்தமான, பன்னிரண்டு, அழகிய, தாமரை, தக்க, தத்தத், தனந்தனம், வெட்டிப், அன்புடன், தம்பிரானே