பாடல் 1266 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த ...... தனதான |
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற மட்டுற் றசுற்றத்தர் ...... மனையாளும் மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன் நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல் தித்திப் பையிச்சிக்கு ...... மணவாளா முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1266 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், தனத்தத்த, வந்து, பெருமாளே