பாடல் 1238 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
அமிர்த வர்ஷணி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தந்தந் தனந்த தந்தந் தனந்த தந்தந் தனந்த ...... தனதான |
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந் தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்க ...... ளிளைஞோரும் எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும் இன்பங் களைந்து துன்பங்கள் மங்க இன்றுன் பதங்கள் ...... தரவேணும் கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள் கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த குன்றம் பிளந்த ...... கதிர்வேலா ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர் அங்கம் பொருந்து ...... மழகோனே அண்டந் தலங்க ளெங்குங் கலங்க அன்றஞ் சலென்ற ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1238 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தந், தனந்த, கொண்டு, எல்லாம், குளிர்ந்த, மிக்க, கலங்க, சிறந்த, புகழ்ந்து, பிளந்த, பெருமாளே