பாடல் 1170 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
நவரஸ கண்டை
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தந்த தான தான தான தந்த தான தான தான தந்த தான தான ...... தனதான |
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு நீளு மங்க மாகி மாய ...... வுயிரூறி நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந் தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள் பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே. |
* காஞ்சியில் கணிகண்டன் என்ற சீடனைப் பெற்றிருந்த திருமழிசை ஆழ்வார், ஒருமுறை மன்னனால் கணிகண்டன் அநியாயமாக நாடுகடத்தப்பட்டபோது, தாமும் நாடு துறந்ததோடு, பெருமாளையும் காஞ்சியை விட்டு வரும்படியாகப் பாடினார். அவ்வாறே பெருமாளும் ஆழ்வாரின் பின்னே சென்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1170 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, எலும்பு, பெருமாளே, ஆகிய, முடிவு, கணிகண்டன், ஆழ்வார், திருமழிசை, மீது, போய், மேவி, கொண்ட, மாகி, நீதி, ரோடு, கொண்டு, வந்து, தோகை