பாடல் 1135 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தானன தனதன தனதன தத்தத் தானன தனதன தனதன தத்தத் தானன ...... தனதான |
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர் இருவிழி யதனில கப்பட் டேமன மிசைபட வசனமு ரைத்திட் டேபல ...... மினிதொடே இடையது துவளகு லுக்கிக் காலணி பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதர இளமுலை குழையஅ ணைத்துக் கேயுர ...... மணியோடே மதகத பவளம ழுத்திப் பூஷண மணிபல சிதறிநெ றித்துத் தானுக மருமலர் புனுகுத ரித்துப் பூவணை ...... மதராஜன் மருவிய கலவித னக்கொப் பாமென மகிழ்வொடு ரசிதுமி குத்துக் கோதையை மருவியு முருகிக ளைத்துப் பூமியி ...... லுழல்வேனோ திரிபுர மெரியந கைத்துக் காலனை யுதைபட மதனைய ழித்துச் சாகர திரைவரு கடுவைமி டற்றிற் றானணி ...... சிவனார்தந் திருவருள் முருகபெ ருத்துப் பாரினில் சியொதனன் மடியமி குத்துப் பாரத செயமுறு மரிதன்ம னத்துக் காகிய ...... மருகோனே நரிகழு வதுகள்க ளிக்கச் சோரிகள் ரணகள முழுதுமி குத்துக் கூளிகள் நடமிட அசுரர்கு லத்துக் காலனை ...... நிகராகி நனிகடல் கதறபொ ருப்புத் தூளெழ நணுகிய இமையவ ருக்குச் சீருற நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ...... பெருமாளே. |
விலைமாதர்களின் இரண்டு மார்பகங்களும் மலைகளுக்குச் சமமானவை என்று உவமை கூறி, அவர்களுடைய கண்களாகிய வலையில் வசமாக அகப்பட்டு, என் மனம் பொருந்தும் வகையில் நன்றாகவும் ஒழுங்குடனும் இனிய வார்த்தைகளைப் பேசி, இடுப்பு நெகிழும்படி குலுக்கியும், காலில் அணிந்துள்ள சிலம்பின் மணிகள் ஓசை செய்யவும், மலை போன்ற இளம் மார்பகம் குழையும்படி அணைத்து, தோளணியில் உள்ள ரத்தினங்களுடன், மரகதம் பவளம் இவைகள் பதிக்கப் பெற்ற அலங்காரமான பல மணிகளும் கலைந்து, முறிப்புண்டு கழல, வாசனை மலர்களையும் புனுகு சட்டத்தையும் அணிந்து, மலர்ப்படுக்கையில் மன்மத ராஜனுடைய சாஸ்திரப்படி பொருந்திய புணர்ச்சிக்கே இக்கலவி ஒப்பாகும் என்று, மிக்க மகிழ்ச்சியுடன் ரசித்து, பெண்களைக் கூடிப் பொருந்தியும், உடலும் மனமும் உருகிச் சோர்ந்து இந்த உலகத்தில் அலைந்து திரிவேனோ? திரிபுரங்களும் எரியும்படி சிரித்து, யமனை உதைத்து, மன்மதனை (நெற்றிக் கண்ணால் எரித்து) அழித்து, (பாற்)கடலின் அலையில் வந்த விஷத்தை கண்டத்தில் அணிந்த சிவபெருமானுடைய திருவருளால் வந்த முருகனே, மமதையுடன் விளக்கமுற்றிருந்த துரியோதனன் இறக்கும்படி, மிக நன்றாக பாரதப் போரில் வெற்றி கண்ட திருமாலுடைய மனத்துக்கு விருப்பமான மருகனே, நரி, கழுகு ஆகியவை மகிழ்வுற, ரத்தங்கள் போர்க்களம் முழுமையும் நிறைந்து, பேய்கள் நடனம் செய்யவும், அசுரர் குலத்துக்கு ஒரு யமன் போலாகி, கடல் மிகவும் கதறவும், கிரெளஞ்சம், எழு கிரி ஆகியவை பொடிபடவும், அண்டிச் சரண் புகுந்த தேவர்களுக்கு நல் வாழ்வு வரவும், நணுகாத பகைவர் இறந்து பட அவர்களை அழித்து கீர்த்தி பெற்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1135 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, தத்தத், அழித்து, ஆகியவை, பெற்ற, வந்த, பெருமாளே, குத்துக், காலனை, செய்யவும்