பாடல் 1133 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தர்பரிகானடா
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானா தானா தனன தந்தன தானா தானா தனன தந்தன தானா தானா ...... தனதான |
இரவொ டும்பக லேமா றாதே அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி இரைகொ ளும்படி யூடே பாடே மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி நரைக ளும்பெரி தாயே போயே கிழவ னென்றொரு பேரே சார்வே நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி நயன முந்தெரி யாதே போனால் விடிவ தென்றடி யேனே தானே நடன குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ திருந டம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மா¡£ சூரி திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி சிவனி டந்தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி யாயீ மாயீ சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா அரவ கிங்கிணி வீரா தீரா கிரிபு ரந்தொளிர் நாதா பாதா அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா அரிய ரன்பிர மாவோ டேமூ வகைய ரிந்திர கோமா னீள்வா னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1133 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தந்தன, தகதிமி, வந்து, வாழ்க்கையின், தரித்தவள், இன்றி, நான், போனால், யாதே, போயே, பேரே, பெருமாளே