பாடல் 1062 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான |
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் மனது போற்கரு கினகு வாற்குழல் வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி அவுணர் கூப்பிட வுததி தீப்பட ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1062 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, வேளே, கோகோ, பெருமாளே, தானோ, என்றும், தேனோ, பாலோ, வருக, வாளோ, மானோ, வானோ, தாத்தன