எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்? - சர்தார்ஜி ஜோக்ஸ்
அங்க அவரோட நண்பர் ஒருத்தர், நம்ம பார்த்திபன் மாதிரி போட்டு வாங்குற டைப்பு.
"எல்லாரும் உங்களை முட்டாள்னு சொல்றாங்களே, நீங்க முட்டாளா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு நீங்க சரியான பதில் சொல்லனும்" அப்படிங்கறாரு.
சர்தார்ஜியும் "கேள்வி எல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு...கேளுப்பா" அப்படிங்கிறாரு.
ஒடனே நம்ம பார்த்திப நண்பரும்"வெறும் வயித்துல ஒங்களால எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?"அப்படின்னு ஒரு கேள்வி கேக்கறாரு.
சர்தார்ஜி சொல்றாரு "ஏழு"ன்னு. இதை கேட்ட அவரோட ஃபிரண்டு சொல்றாராம் "ஏம்ப்பா மொத சப்பாத்தியைச் சாப்புட்டதும் உங்க வயிறு எப்படி வெறும் வயிறா இருக்க முடியும்? வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும்?"னு கேள்வி கேட்டு கலாய்க்கிறாரு.
பல்பு வாங்குனாலும், சர்தார்ஜி "சே! பாயிண்டா தாம்யா சொல்லிருக்கான். இது நமக்குத் தோணாமப் போச்சே?. பரவால்லை... நாமளும் இதே மாதிரி யாரையாச்சும் கேள்வி கேட்டு கலாய்க்கனும்"னு முடிவு பண்ணறாரு.
வீட்டுக்குப் போன முதல் வேலையா சர்தார்ஜி அவர் மனைவி கிட்ட அதே கேள்வியைக் கேக்குறாரு "உன்னால வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?" அதுக்கு அந்தம்மா சொல்லுது "அஞ்சு". இதை கேட்ட சர்தார்ஜி "சே...ஜஸ்ட் மிஸ்ஸு! நீ மட்டும் ஏழுன்னு பதில் சொல்லிருந்தேன்னு வை உன்னை செமத்தியா கலாய்ச்சிருப்பேன்" அப்படின்னாராம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்? - சர்தார்ஜி ஜோக்ஸ், ", சர்தார்ஜி, முடியும், ஜோக்ஸ், சப்பாத்தி, சாப்புட, எத்தனை, கேள்வி, jokes, வெறும், வயித்துல, ஒங்களால, கேட்டு, பதில், கேட்ட, நம்ம, நகைச்சுவை, சிரிப்புகள், அவரோட, மாதிரி, நீங்க, அதுக்கு