சிந்திக்கத் தெரியாத முட்டாள் - சிரிக்க-சிந்திக்க
குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்திக்கத் தெரியாத முட்டாள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், முட்டாள், jokes, யோசித்துக், சிந்திக்கத், அரசன், தெரியாத, அல்லது, அவன், தானாக, யாரேனும், வந்து, சிந்திக்க, அரசே, கொண்டிருக்கிறேன், சிரிக்க, சொன்னான், கொண்டு, வந்ததா, பார்த்த, சிறிது, முழுவதும், இரவு, நகைச்சுவை, சர்தார்ஜி, தூங்காமல், அவனும், என்ன, கழித்து, நேரம், என்றான், வந்தார்