கடி ஜோக்ஸ் 86 - கடி ஜோக்ஸ்

முராரி : அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.
-***-
தொண்டர் : "தலைவா! உங்க பேரில் விசாரணைக்குக் கமிஷன் வச்சிருக்காங்க"
தலைவர் : "கமிஷனா".....வெரி குட்! எவ்வளவு கிடைக்கும்?..."
-***-
கோபு : பையன் பட்டாசு கேட்டா அதுக்கு ஏன் அவனை இப்படி போட்டு அடிக்கிறீங்க?
பாபு : கார் குண்டுதான் வேணும்னு அடம் பிடிக்கிறான் ராஸ்கல்.
-***-
மகன் : அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்
தந்தை : அப்படியா..... மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.
-***-
ஒருவர் : நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு
மற்றொருவர் : லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
ஒருவர் : நீங்க வேற நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 86 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", ஒருவர், போச்சு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை