கடி ஜோக்ஸ் 59 - கடி ஜோக்ஸ்

-***-
தொண்டர் : எங்கள் தலைவர் சரியாகக் கணக்குப் பார்க்காமல் எல்லா ஸீட்டுகளையும் தோழமைக் கட்சிகளுக்கே கொடுத்துவிட்டதால், கடைசியில் எங்களுக்கு ஸீட் இல்லாமல,; போய்விட்டது. எனவே, தோழமைக் கட்சிகள் தலா இரண்டு ஸீட்டுகளைத் திரும்ப எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .. ..
-***-
தலைவர் : சென்ற முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதியை வந்து பார்க்கவில்லை என கோபப்படுகிறீர்களே .. .. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, இந்திய வரைபடத்தில் எத்தனை முறை நம் தொகுதியைப் பாரத்துக் கண்கலங்கியிருக்கேன் தெரியுமா .. .. ?
-***-
தலைவர் : கடந்த ஆட்சியிலே இலவசத் திருமணங்கள் மட்டும் செய்துவைத்தார்கள். ஆனால், எதிலும் புதுமை செய்யும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச விவாகரத்துகளையும் நடத்திக்காட்டுவோம்
டீச்சர் : ஏன்டா லேட்டு??
ஆனந்த் : பள்ளிகூட போர்டை படித்ததால் தான் லேட்டாயிருச்சு டீச்சர்.
டீச்சர் : என்னது பள்ளிகூட போர்டை படித்ததால் லேட்டா??
ஆனந்த் : பள்ளிபகுதி மெதுவாக செல்லவும் என்று போர்டு வைத்திருக்கிறீர்களே அதனால் மெதுவாக வந்தேன்..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 59 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தலைவர், டீச்சர், பள்ளிகூட, ஆனந்த், போர்டை, மெதுவாக, படித்ததால், முறை, எங்களுக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பெரிதா, எங்கள், என்பது, தோழமைக்