கடி ஜோக்ஸ் 30 - கடி ஜோக்ஸ்
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
-***-
பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.
வேலு : எத வச்சு சொல்ற?
பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.
-***-
வேலு : வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ரமனன் : ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!
-***-
லல்லி : நான் என் கணவரும் வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம் !
மல்லி : நிஜமாவா ?
லல்லி : ஆமாம் பத்துப்பாத்திரம் தேய்ச்சாக்கூட ஆளுக்கு ஐந்து தேய்ப்போம்
-***-
வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 30 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", வேலு, பொண்ணு, லல்லி, ரமனன், நான், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, பாஸ்கி, பாக்கி