கணவன் மனைவி ஜோக்ஸ் 15 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி :- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன் :- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி :- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன் :- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி :-????????
-***-
கணவன் : நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
-***-
மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
-***-
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட மட்டும் நீ காரணமேயில்லாம எப்போப் பார்த்தாலும் சண்டை போடறியாமே. ஏன்?
மனைவி : நான் என்ன செய்யறது? அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
-***-
மனைவி கணவனிடம்
மனைவி : எத்தனை தடவை சொல்றது ... பையன் ஹோம் ஒர்க்கை ஆபிசில் தூங்கிக்கிட்டே போடாதீங்கன்னு... பாருங்க... டீச்சர் பையனோட டயரியில.. பார்த்து தூங்காம ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாடான்னு எழுதியிருக்காங்க...
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 15 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நான், என்ன, பையன், ஹோம், மட்டும், உங்க, சொல்லலை, kadi, நகைச்சுவை, வீட்டு, அவன்