கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே.... அதைச் சொல்ல நீங்க யாரு ?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?
மனைவி : இல்ல,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.
-***-
கணவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க....
மனைவி : சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் : ஓகே ...அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
மனைவி : என்னது...எங்கம்மாவுக்கா....? சொல்றத சரியா..சொல்றீங்களா...ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லே...உடனே...டாக்சிக்கு...சொல்லுங்க...ஆபீசுக்கு ஒரு வாரம்...லீவும்....சொல்லுங்க...போய்...பாத்துட்டு வந்துடுவோம்.
-***-
கனவன் : அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!.
மனைவி : பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!.
-***-
மனைவி : சாப்பாடு போட வா?
கணவன் : அடியே இன்னைக்கு நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டேன்
மனைவி : அது சரி எவ்வளவு மாவாட்டிட்டு வந்தீங்க?
-***-
கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"
மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், ", சொல்லுங்க, நான், அர்த்தம், எல்லாம், நகைச்சுவை, kadi, இனிமே, நீங்க