சிரிக்கலாம் வாங்க 97 - சிரிக்கலாம் வாங்க

தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'
'என்னவாம்?'
'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !
-***-
ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிகிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்கேன்.
அதென்ன போலி வாழ்க்கை?
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனாம சிரிச்சிக்கிட்டிருக்கேன்!
-***-
'நெஞ்சில் ஈட்டி பாயும் அளவிற்கு நீங்கள் எதிர்த்து போர் புரிந்தீர்களா மன்னா ?'
'ஊஹூம்... எவ்வள்வு தூரத்தில் துரத்தி வர்றான்னு திரும்பிப் பார்த்தபோது. சண்டாளப் பாவி அம்பை எய்திட்டான்யா !'
-***-
பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?
ரைட் சொல்லிவிட்டார்.
-***-
நம்மோட கள்ளத்தொடர்பு தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை விட்டு நிறுத்த போறா என் மனைவி !'
'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான் வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 97 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வாழ்க்கை, போலி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை