சிரிக்கலாம் வாங்க 96 - சிரிக்கலாம் வாங்க
தலைவருக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதிகமா ? சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதிகமா ?
'எனக்குத் தெரிஞ்சு, அவருக்கு சாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் அதிகம் !'
-***-
மைசூர் போண்டா ஏன்யா ஊசி போச்சு?
மைசூர்ல இருந்து சுட்டுக் கொண்டு வர வேண்டாமா? லேட்டாகி ஊசிப்போச்சு...!
-***-
முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு!
இப்படி எப்படி?
கடலை காண்பிக்கிறதோட சரி!
-***-
எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
-***-
யோவ்! நான் இல்லாதப்ப புகார் தரவந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியமே?'
'நீங்கதானே ஸார் உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க!'
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 96 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், கடலை, எப்படி, அதிகமா, காம்ப்ளெக்ஸ், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்