சிரிக்கலாம் வாங்க 94 - சிரிக்கலாம் வாங்க
எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!
அப்படியா?
ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.
-***-
என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.
ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!
-***-
அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.
அப்புறம்?
கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.
பின்ன என்ன ஆச்சு?
கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.
-***-
ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.
ஏன்.
எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.
-***-
அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க
எப்படி?
இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 94 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, கமிஷன், என்ன, அந்த, எடையை, குறை, லஞ்சம், வேலை, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, எல்லோரும், நீட்டி