சிரிக்கலாம் வாங்க 63 - சிரிக்கலாம் வாங்க
இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது;
புதுசா வந்திருக்கிற டீச்சர் இங்கிலீஷ்ல நல்லாத்தான் பாடம் நடத்துறாங்க. ஆனா நடு நடுவிலே திடீர்னு நிறுத்திட்டு விளம்பரம் செய்ற மாதிரி அதை உபயோகிங்க, இதை உபயோகிங்கன்னு சொல்றாங்க அது ஏன்டா?
அதுவா...அவங்க இங்கிலீஷ் கத்துக்கிட்டது டி.வியிலயாம்.
-***-
நம்ம தலைவரோட செல் நம்பர் இருபத்தாறு...
என்னது இரண்டு நம்பர்தானா ....?
நான் சொன்னது...... ஜெயில்ல அவரோட செல் நம்பர் !
-***-
இன்னைக்கு சமையல் குறிப்பு ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்திச்சிங்க , நாளைக்கு உங்களுக்கு அதை சமைத்து தரபோறேன்
என்ன அது ?
ஸ்டவ்ல வெந்நீர் வைத்து அதுல ஹார்லிக்ஸ் கரைச்சு கொடுக்கப்போறேன்
-***-
“ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க!”
“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க!”
-***-
இரு மாணவர்கள் பேசிக்கொன்டது:
கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?
தெரியலையே...
ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 63 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், நான், ரொம்ப, என்ன, மச்சான்னு, நம்பர், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இரண்டு, செல்