சிரிக்கலாம் வாங்க 3 - சிரிக்கலாம் வாங்க
"வரதட்சணையா வைரத்தைத் தர்றேன்னு சொல்லிட்டு கரியைத் தர்றீங்களே!"
"இன்றைய கரி, நாளைய வைரமாச்சே!"
-***-
குரைக்கிற நாய் கடிக்காது.
எப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே?
ஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான்.
-***-
ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"
ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"
-***-
கரும்புக்கும் ,எறும்புக்கும் என்ன different? . . .
தெரியலய
கரும்பா நாம கடிக்கறோம் எறும்பு நம்மள கடிக்குது
-***-
"மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது..."
"ஏன்...?"
"'மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க...?'னு கேட்டா, 'பல்செட் போட்றோம்'னு சொல்றாங்க!"
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 3 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, என்ன, ராமு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை