சிரிக்கலாம் வாங்க 25 - சிரிக்கலாம் வாங்க
அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்
-***-
உங்க பையன் இவ்வளவு முனால வந்ததுக்கு நீங்க ஊக்குவித்தது தான் காரணம்
நான் ஊக்கேல்லாம் விக்கிறதில்லீங்க; பரம்பரை பரம்பரையா பாக்கு விக்கிறதுதாங்க நம்ப வியாபாரம்.
-***-
நிஜமாதான் சொல்றீங்களா....... டாக்டர்? என் மனைவியைக் காப்பத்த வழியே இல்லையா…!?
யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்லாம்…அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கிறது…?
-***-
முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
-***-
ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?
போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.
அப்பயும் முடியலேன்னா?
ஏசியை "ஆன்" பண்ணுவேன்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 25 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், கேக்க, திரும்ப, முன்னாடி, முடியலேன்னா, நான், அந்த, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, என்ன, நோயாம்