சிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க
"நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."
"எப்படி...?" "மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"
-***-
"உங்கப்பா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி, அதில் ஒண்ணைப் பிடிச்சுட்டு வெச்சார்ன்னா மீதி எத்தனை இருக்கும்?"
"எட்டு சார்!"
"எப்படி?"
"அவருக்குத் தெரியாம நான் ஒண்ணை உருவிடறேன்ல..."
-***-
குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!
-***-
என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?
அப்படியா, யார்டா அவங்க?
வேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்!
-***-
உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?
ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.
நெஜமாவா?
எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, எப்படி, கல்யாணம், பிரியாணி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்